IPL 2024 | CSK Vs SRH | Markram - Moeen Ali (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 06, ஹைதராபாத் (Sports News): 2024 ஐபிஎல் தொடரின் (IPL 2024) 18 ஆவது ஆட்டம், நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (SRH Vs CSK), 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் விளையாடிய ருத்ராஜ் 21 பந்துகளில் 26 ரன்னும், ரகானே 30 பந்துகளில் 35 ரன்னும், சிவம் டியுப் 24 பந்துகளில் 45 ரன்னும், ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு நேற்று திறம்பட இருந்ததால், சென்னை அணி ரன்னை குவிக்க இயலாமல் திணறிப்போனது. இறுதியில் தோனியும் (MS Dhoni) 3 பந்துகளை எதிர்கொண்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர். Hardik Pandya Offers Prayers at Somnath Temple: சோம்நாத் சிவனை கையில் தொட்டு, பயபக்தியுடன் அபிஷேக பூஜை வழிபாடு: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி செயல்.! 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத்: இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலாகவே அதிரடியாக அடித்து ஆடியது, இதனால் அணியின் வெற்றி வசமானது. ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்னும், எய்டன் 36 பந்துகளில் 50 ரன்னும் அடித்து அசத்தியிருந்தார். ஆட்டத்தின் முடிவில் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. Tips for Exercising Safely: எலும்பே நலம்தானா?.. உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..! 

அசத்திய அபிஷேக் ஷர்மா: சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய மொயீன் அலி இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். நேற்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சென்னை அணிக்கு தோல்வியை தந்தாலும், ஹைதராபாத் அணியின் பேட்டிங், பவுலிங் திறம்பட விளங்கியது வெற்றி அவர்களின் வசமானது. நேற்றைய ஆட்டத்தின் நாயகனாக ஹைதராபாத் அணியை சேர்ந்த அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 6ம் தேதி இன்று, ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RR Vs RCB) அணிக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இதனை நேரலையில் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக காணலாம்.

ஷாநபாஸின் விக்கெட்டை தூக்கிய மொயீன் அலி:

சிக்ஸரில் மிரட்டிய நிதிஷ்:

ஆரஞ்சு ஆர்மியின் கொண்டாட்டம்: