Salem Shocker: பணிப்பெண்ணை கொலை செய்து உடல் வீச்சு; சேலத்தை அதிரவைத்த சம்பவத்தில் கணவன் - மனைவி கைது.!
சங்ககிரி பகுதியில் இளம்பெண்ணின் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் ஒன்று அம்பலமாகி இருக்கிறது.
அக்டோபர் 30, சங்ககிரி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி (Sangagiri Suitcase Mu), பிஆர்எம் திருமண மண்டபத்திற்கு அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய ட்ராலி பேக் ஒன்று இருந்தது. இந்த விஷயம் குறித்து அக்கம்-பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த சங்ககிரி காவல்துறையினர் பேக்கை திறந்து பார்த்தபோது, இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை தீவிர விசாரணை:
இதனையடுத்து, டிராலி பேக் இங்கு வந்தது எப்படி? யார் வந்து வீசி சென்றார்கள்? என விசாரணை நடந்தது. தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இளம்பெண் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என்ற கோணத்தில், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தங்கியிருந்து கல்வி, வேலை என இருக்கும் பெண்கள் மாயமாகியுள்ளனரா? எனவும் விசாரித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது, அதிர்ச்சி தகவல் அம்பலம்:
அதில் எந்த முடிவும் கிடைக்காத நிலையில், சுமார் 150 க்கும் அதிகமான கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு அருகிலேயே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட காரின் உரிமையாளர் அபினேஷ் என்பவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து, அவரிடம் விசாரணை நடத்தின்போது அதிர்ச்சி உண்மை அம்பலமானது. Chennai Shocker: 22 வயது பெண் ஆசிரியரை உடலெல்லாம் கடித்து வைத்த தலைமை ஆசிரியை.. தனிமை பழக்கம் போதையில் தறிகெட்ட சோகம்.!
வாய்த்தகராறு கொலையில் முடிந்தது:
அதாவது, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பண்ணந்தூர் பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அபினேஷ் சாஹு - அஸ்வினி படேல். இவர்கள் தங்களின் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரை சேர்ந்த உறவினர் சுனைனா என்பவரை வீட்டில் தங்கவைத்து கவனித்து வந்துள்ளனர். சுனைனா வீட்டில் பணிப்பெண் போலவும் இருந்துள்ளார். இதனிடையே, அஸ்வினி, சுனைனாவை சம்பவத்தன்று திட்டியபோது, இருதரப்பு இடையே வாய்த்தகராறு உண்டாகி இருக்கிறது.
இருவரும் கைது:
வயதில் சின்னவளான நீ என்னை எப்படி எதிர்த்து பேசுவாய்? என கேள்வி எழுப்பிய அஸ்வினி, அங்கிருந்த கட்டையை எடுத்து சிறுமியின் தலையில் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் சிறுமி மயங்கிவிட, அவர் உயிரிழந்ததாக எண்ணி கணவருடன் சேர்ந்து சடலத்தை ட்ராலி பேக்கில் அடைத்து புறப்பட்டுள்ளனர். சங்ககிரி பகுதியில் உடலை வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் சென்றுள்ளனர். இறுதியில் விசாரணையில் சிக்கிக்கொண்டுள்ளது தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.