9-Year-Old Boy Dies: 9 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பலி? திருப்பத்தூரில் சோகம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!

கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

Mosquito | Dead File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 19, வாணியம்பாடி (Tirupattur News): திருப்பத்தூர் (Thirupathur) மாவட்டத்தில் உள்ள பொம்மிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் மகன் கவியரசு (வயது 9). சிறுவன் கவியரசு அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, கடந்த ஒரு வாரமாகவே சிறுவன் லேசான காய்ச்சல் (Dengue Fever Death) உட்பட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். முதலில் இயல்பான காய்ச்சலாக இருக்கும் என எண்ணி பெற்றோர் மருந்துகளை கொடுத்ததாக தெரியவருகிறது. தொடர்ந்து கடந்த 17ம் தேதி சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே, உடனடியாக அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், காய்ச்சலின் தீவிரம் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். Thuraiyur Egg Case: அரசின் சத்துணவு முட்டையில் ஹோட்டலில் ஆம்லேட், கலக்கி.. உணவகத்தை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு.! 

சிகிச்சை பலனின்றி பரிதாப பலி:

இதனால் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல அறிவுறுத்தியுள்ளனர். சிறுவனின் பெற்றோரும் மகனை உடனடியாக தர்மபுரி அழைத்துச் சென்று அனுமதிக்கவே, 2 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ், பொம்மிக்குப்பம் கிராமத்தில் சுகாதார ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அங்கு மருத்துவ முகாம் அமைத்து டெங்கு தடுப்பு சோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிகழ்விடத்தில் முகாமிட்டுள்ள நிலையில், கூடுதலாக 3 பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாரா? என்பதை உறுதி செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் டெங்கு உறுதியாகும் பட்சத்தில், அதுசார்ந்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.