Tiruvannamalai: ஆசீர்வாதம் பெயரில் கட்டாய வழிப்பறி., புதுமணத்தம்பதி மீது தாக்குதல்; திருநங்கைகளின் அதிர்ச்சி செயல்..!
வலுக்கட்டாயப்படுத்தி ஆசீர்வாதம் செய்வதாக பாவித்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திருநங்கைகள், ரூ.500 பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 10, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலுக்கு (Tiruvannamalai Temple), தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்துசெல்வது வழக்கம். கோவிலில் திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் குடும்பத்தில் ஏதேனும் திருமணம் நடந்தால், புதுமனாதபதிகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கமான ஒன்றாகும்.
திருநங்கைகள் (Tiruvannamalai Transgenders) செயலால் வருத்தம்:
இவ்வாறாக கோவிலுக்கு ஆயிரக்கணக்கில், விழாக்காலங்களில் இலட்சக்கணக்கில் திரளும் மக்களை வைத்து அங்கு சுற்றுலா வருவாயும் பெருமளவு இருக்கும். இதனை பயன்படுத்தி திருநங்கைகளும் அங்கு வரும் பக்தர்களிடம் பணம் வாங்கி பிழைப்பை நகர்த்தி வருகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.10 முதல் பெறப்படும் தொகை, ஒருசில நேரம் மிரட்டல் பாணியில் சென்று ரூ.500 வரையும் கேட்டு பெறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பக்தர்கள் தங்களின் அனுபவம் குறித்து புகார் பதிவு செய்து செல்கின்றனர். Bus Accident: பேருந்து - டூ வீலர் மோதி பயங்கர விபத்து; இருசக்கர வாகன ஓட்டி பலி., பற்றி எரிந்த பேருந்து..!
திருஷ்டி சுற்றுவதாக வழிப்பறி:
திருநங்கைகளின் செயல் வழிப்பறி போல தொடர்ந்த காரணத்தால், மாவட்ட ஆட்சியர் சார்பில் திருநங்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு புதுமணத்தம்பதிகள் திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த திருநங்கைகள் கும்பல், தம்பதிக்கு எலுமிச்சை வைத்து திருஷ்டி சுற்றுவதுபோல பாவித்து பணம் கேட்டுள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வந்ததும் இப்படியா? என எண்ணி ரூ.200 பணம் கொடுத்துள்ளனர்.
புதுமணத்தம்பதிகள் வசைபாடல்:
அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆளுக்கு 200 என ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கேட்டதாக தெரியவருகிறது. பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததும் ஆவேசமடைந்த திருநங்கைகள் வசூலுக்காக புதுமணத்தம்பதிகளை அவதூறான வார்த்தையால் பேசி தாக்கி இருக்கின்றனர். மேலும், தகவலை அறிந்து வந்த போக்குவரத்து காவலரும் வசைபாடலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. திருநங்கைகளின் செயலுக்கு எதிராக கண்டனத்தையும் குவித்தது.
3 பேர் கைது:
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரீனா, மாயா, தனுஸ்கா ஆகிய திருநங்கைகளை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
திருநங்கைகள் தம்பதிகளை தாக்கி, அவதூறாக வசைபாடும் காணொளி:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)