நவம்பர் 09, சங்ககிரி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி (Sangagiri Bus Fire Accident), கோவை - சேலம் (Coimbatore Salem Highway) தேசிய நெடுஞ்சாலையில் இன்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று, 20 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்தது. இந்த பேருந்து சங்ககிரி பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகன ஓட்டி திடீரென குறுக்கே புகுந்ததாக தெரியவருகிறது.
தீப்பிடித்து எரிந்த (Bus Fire Accident) பேருந்து:
இதனால் அவரின் மீது வாகனத்தை மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் முற்பட்டுள்ளார். ஆனால், ஓட்டுனரின் செயல்கள் பலனின்றி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சாலையிலேயே பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. Chennai High Court: காவலர்களிடம் அநாகரீக பேச்சு; சர்ச்சை ஜோடி தனலட்சுமி, சந்திர மோகனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு.!
20 பயணிகள் மீட்பு & டூவீலரில் வந்தவர் மரணம்:
பேருந்தில் இருந்த 20 பயணிகள் பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளால் மீட்கப்பட்டனர். இருசக்கர வாகன ஓட்டி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு & மீட்புப் படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் தீவிரம்:
பேருந்தில் எரிந்த தீயை அணைத்த அதிகாரிகள், விபத்தில் பலியான இருசக்கர வாகன ஓட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. எக்ஸ் எல் (XL Bike) வாகனத்தில் வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேற்படி களநிலவரங்கள் காத்திருக்கின்றன.
பேருந்து விபத்திற்குள்ளாகி பற்றி எரிந்த காணொளி:
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்தது
கோவைசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன்… pic.twitter.com/RHskqe9Hr7
— Spark Media (@SparkMedia_TN) November 9, 2024