DSP Gayathri Attacked: பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.. பதற்றம்.!

இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், இறுதியில் டிஎஸ்பி மதிப்புள்ள அதிகாரியை தாக்கிய சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பதற்றம் நிலவி வருகிறது.

Aruppukottai DSP Gayathri Attacked by Protestors (Photo Credit: @rightnews_ind X)

செப்டம்பர் 03, அருப்புக்கோட்டை (Virudhunagar News): இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டத்தில் உள்ள கமுதி, பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் காளிகுமார் (33). இவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காளிக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். தனது வாகனத்தில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான உதிரி பாகத்தை ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார்.

5 பேர் கும்பலால் ஓட்டுநர் வெட்டிக்கொலை:

அச்சமயம், திருச்சுழி - இராமேஸ்வரம் சாலையில், கேத்த நாயக்கன்பட்டி கிராமம் அருகே சென்றபோது காளிகுமாரின் வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காளிக்குமார் வாகனத்தில் இருந்து இறங்கியபோது, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல் தப்பிச்சென்றது. TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நிலவரம் எப்படி?; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

காவல்துறையினர் விசாரணை:

தகவல் அறிந்த திருச்சுழி காவல் துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய காளிகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

டிஎஸ்பி மீது தாக்குதல்:

தலைமறைவான கும்பலுக்கு வலைவீசப்பட்டு இருக்கும் நிலையில், காளிக்குமரின் மறைவை அறிந்த உறவினர்கள் அருப்புக்கோட்டை விரைந்தனர். அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனிடையே, டிஎஸ்பி காயத்ரி போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேச சென்றார். அப்போது, டிஎஸ்பி போராட்டக்காரர் ஒருவரை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி:

அதனை ஏற்றுக்கொள்ளாத நபர் டிஎஸ்பியின் கைகளை உதறியபடி, உடலில் கைவைத்து முன்னேறினார். இதனால் ஆவேசமான டிஎஸ்பி அவரை கண்டித்து தடுக்க முற்படவே, போராட்டக்காரர்களுடன் வந்த ஒருவர் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் டிஎஸ்பியை மீட்டனர். இதற்குப்பின் போராட்டக்காரர்களிடம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி, காளிக்குமார் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

தன்மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் டிஎஸ்பி காயத்ரி போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி இருந்தார். அதேவேளையில், அவரின் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். நிகழ்விடத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் டிஎஸ்பி போராட்டக்காரர்களை தடுப்பதும், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது: