Kalaignar Centennial Park: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இவ்வுளவு வசதிகளா?.. அசத்தல் தகவல், பார்வைக் கட்டண விபரம் இதோ.!
ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
அக்டோபர் 08, சென்னை (Chennai News): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (MK Stalin), கடந்த 2023 சுதந்திர தினவிழாவில் உரையாற்றும்போது, சென்னையில் உள்ள கோபாலபுரம், கதீட்ரல் சாலையில், செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் இருக்கும் 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா (Kalaignar Park Chennai) அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் ரூ.46 கோடி செலவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (அக்.08) பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மாநிலத்தின் இயற்கை சூழலை பாதுகாத்திடவும், வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. Civil Services Exam Training: குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
இயற்கை சூழல்:
இத்துடன் பல இடங்களில் பூங்காக்கள் புதுப்பிப்பு செய்து, மீண்டும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. எதிர்காலத் தலைமுறை கலைஞரின் அரசியல் தீர்மானம், பன்முக ஆற்றல், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்கா, சென்னை கோபாலபுரம் பகுதியில் செம்மொழி பூங்காவுக்கு எதிரே அமைக்கப்ட்டுள்ளது. இந்த பூங்காவில் பரந்து விரிந்த பசுமைச்சூழல், பொழுதுப்போக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்துள்ளன. உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஆர்க்கிட் குடில், கண்ணாடி மாளிகை, அலங்கார வளைவு பசுமை குகை, பறவையகம், இசை நீரூற்று போன்றவை இடம்பெற்றுள்ளன.
கட்டண விபரங்கள்:
இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100/-, சிறியவர்களுக்கு ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு ரூ.200/-, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு ரூ.75/- மற்றும் மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.50/-, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது ஆகும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் சிறப்புக் காணொளி: