ஏப்ரல் 07, டெல்லி (Delhi News): இந்தியாவில் ஒரு முக்கிய நிதி நடவடிக்கையாக, இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் லிட்டருக்கு ரூ.2 கலால் வரியை அதிகாரப்பூர்வமாக உயர்த்தியுள்ளது. நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையால் ஏப்ரல் 7, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண். 02/2025-மத்திய கலால் வரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13 மற்றும் டீசலுக்கு ரூ.10 என நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Girl Dies Of Heart Attack: மேடையில் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி.. திடீரென மாரடைப்பால் பலி..!
கலால் வரி அதிகரிப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், சமீபத்திய வரி அறிவிப்புகளைத் தொடர்ந்து அதிகரித்த வர்த்தக நிலவரங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கூர்மையான சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்த உயர்வு வந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.6% சரிந்தது. ஓஎன்ஜிசி 4.4%, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) 6.1% சரிந்ததுள்ளது.
பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?
கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல்-டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கலால் வரி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விலை உயர்வு இருக்காது எனவும், மக்கள் வாங்கும் சில்லறை பெட்ரோல்-டீசல் விலையில் காலால் வரி உயர்வு பிரதிபலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.