Girl Dies Of Heart Attack (Photo Credit: @drnpsinghmbbs X)

ஏப்ரல் 07, ஒஸ்மனாபாத் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், உஸ்மனாபாத் (Osmanabad) மாவட்டத்தில் தாராசிவ் நகரத்தில் தனியார் கல்லுாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வர்ஷா கரத் (வயது 20) என்ற இளம்பெண் பேச்சு போட்டியில் பங்கேற்றார். அப்போது, பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென மேடையிலேயே மயங்கி கீழே விழுந்தார். Woman Sexual Abuse: தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்..!

இளம்பெண் மாரடைப்பால் பலி:

உடனடியாக, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் (Heart Attack) உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், வர்ஷாவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதற்கான மருந்துகளை முறையாக அவர் எடுத்துக்கொள்ளாதது தான் இறப்புக்கு காரணம் எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: