ஏப்ரல் 02, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. தங்கநகைக்கடை உரிமையாளர்களும் அதனை உறுதி செய்கின்றனர். KN Nehru ED Raid: அமைச்சர் கே.என் நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. குவியும் தொண்டர்கள்.. பரபரப்பில் அரசியல் வட்டாரம்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை சவரன் தங்கத்தின் விலை ரூ.66,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8,825 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.114000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 68,000ஐ கடந்து இருந்த தங்கம் விலை, கடந்த 2 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம் வாங்க நினைத்தோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தலாம். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா? வீழ்ச்சி அடையுமா? என்பதில் தொடர் சிக்கல் நீடிப்பதால், விலை குறையும்போதே வாங்குவது நல்லது எனவும் தங்கநகை வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.