ஏப்ரல் 07, சென்னை (Kitchen Tips): கோடைகால வெயிலுக்கு இதமாக இளநீர் இஞ்சி பானம் குடிக்கலாம். இது உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளித்து, புத்துணர்ச்சியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இளநீர் இஞ்சி பானம் (Ginger Juice Drink) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Summer Health Tips: சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க கம்பங்கூழ்.. நன்மைகள் என்னென்ன? கம்பங்கஞ்சி செய்வது எப்படி? அசத்தல் தகவல் இதோ.!
தேவையான பொருட்கள்:
இளநீர் - 1 கப்
இஞ்சி - சிறு துண்டு
இளநீர் வழுக்கை - அரை கப்
எலுமிச்சை - அரை மூடி
கல்கண்டு - 1 சிறிய கப்
செய்முறை:
- முதலில் இளநீரை எடுத்து, அதன் நீரை ஒரு டம்ளரில் ஊற்றவும்.
- இளநீருடன் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, தோல் சீவித்துருவிய இஞ்சியும், பொடித்த கற்கண்டையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
- பிரிட்ஜில் 3 மணிநேரம் வைக்கவும். பிறகு, எடுத்து வடிகட்டி இஞ்சிச் சக்கை நீக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
- இளநீர் இஞ்சி பானம், வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்து, நீரேற்றத்தை அளித்து, புத்துணர்ச்சி தருகிறது.