Rajat Patidar Upper Cut by Hardik Pandya (Photo Credit: @imAashutoshh X)

ஏப்ரல் 07, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித்தொடரில், இன்று 20வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Mumbai Indians Vs Royal Challengers Bengaluru IPL 2025) அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததைத்தொடர்ந்து, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. MI Vs RCB: ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.! 

பதறிப்போன ரசிகர்கள் கூட்டம்:

இந்நிலையில், 12.3 வது ஓவரில், 14 பந்துகளில் 13 ரன்கள் அடித்திருந்த ரஜத் படிதார், ஹர்திக் பாண்டியாவின் பந்தை எதிர்கொண்டார். அப்போது, பந்து ரஜத்தின் பேட்டில் பட்டு அவரின் முகத்துக்கு திரும்பியது. நல்வாய்ப்பாக ரஜத் ஹெல்மட் அணிந்திருந்தால் பெரிய அளவிலான காயம் இன்றி அவர் உயிர்தப்பினார். இதனால் உடனடியாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடல் சோதனைக்கு பின் அவர் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். ஒருகணம் ரசிகர்கள் கூட்டம் ரஜத்தின் நிலையை எண்ணி வெடவெடத்துப்போனது.

ரஜத் படிதாரின் ஹெல்மட் மீது பந்து மோதிய காட்சி:

ரஜத்தின் நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி:

ஹெல்மட்டில் அடிவாங்கி பவுண்டரி விளாசிய ரஜத்தை கலாய்த்த விராட்:

அடித்து விளையாடும் ரஜத் படிதார்: