Anger Love boy sets Fire Benz Car: வாக்குவாதத்தில் மௌனம் காத்த காதலி.. ஆத்திரத்தில் சொந்த பென்ஸ் காருக்கு தீ வைத்த காதலன்..!
மருத்துவம் பயின்ற இளைஞர், தனது கல்லூரியில் படிக்க வந்த மாணவியை காதலில் வீழ்த்தி ஊர் சுற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று குளக்கரை அருகே பேசிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் காதலி கண்முன் தனது காருக்கு காதலன் தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஜனவரி 27: மருத்துவராக இருந்து காதலி பேசமறுத்த ஆத்திரத்தில் காருக்கு தீ வைத்த (Doctor Sets Fire Own Benz Car, When He Anger & Argue with Love Girl) கோபக்கார மருத்துவரின் 70 இலட்சம் தீக்கு இரையான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகுளம் (Rajakulam, Kanchipuram), குளக்கரை பகுதில் நேற்றிரவு பென்ஸ் கார் (Benz Car) நின்று கொண்டு இருந்தது. காரில் இருந்த காதல் ஜோடி (Love Couple) பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் காரில் இருந்து வெளியே இறங்கி வார்த்தை (Couple Argument) மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த காதலன் (Lover Sets fire on Own Benz Car, Its Worth Rs.70 Lakh INR) காருக்கு தீ வைத்துள்ளார். அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இரவு நேரத்தில் கார் எரிவதை கண்டு பதறிப்போன உள்ளூர் மக்கள், அங்கு வந்து விசாரித்தபோது காதல் ஜோடியின் சண்டையில் கார் எரிவதை புரிந்துகொண்டுள்ளனர். Father In Law Married Daughter In Law: 28 வயது மருமகளை காதலித்து கரம்பிடித்த 70 வயது மாமனார்.. அவசர கதியில் முடிந்த திருமணம்.! நடந்தது இதுதான்..!
பின்னர், இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு (Fire & Safety Department) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காவல் துறையினரும் (Kanchipuram Police) நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரி (Dharmapuri) மாவட்டத்தை சேர்ந்த காதலன், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் (Private Mediical College) மருத்துவம் படித்து முடித்துள்ளார்.
அதே கல்லூரியில் மருத்துவ மாணவியாக பயின்று வந்தவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலை தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். சம்பவத்தன்று காதலியை சந்திக்க காதலன் வந்த நிலையில், ருவரும் பல இடங்களில் சுற்றிவிட்டு, இரவில் சம்பவ இடத்தில் காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, காதல் ஜோடிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணவி காதலரோடு பேசாமல் மௌனம் காக்க, ஆத்திரத்தில் காதலன் ரூ.70 இலட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு தீ வைத்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.