IPL Auction 2025 Live

DMK Kanimozhi Victory: தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார் கனிமொழி; கொண்டாட்டத்தில் திமுக.!

18வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி அடைந்தார்.

DMK Kanmozhi (Photo Credit: @Kanimozhi X)

ஜூன் 04, தூத்துக்குடி (Thoothukudi News): 18வது மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள், ஜூன் 04ம் தேதியான இன்று வெளியாகிறது. 8,320 வேட்பாளர்கள் 543 தொகுதியில் போட்டியிட்டு மக்களின் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர். இன்று காலை முதலாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் தனியே 240 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், கூட்டணியுடன் சேர்த்து 293 தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. Su Venkatesan Victory: தமிழ்நாட்டில் முதல் வெற்றியை உறுதி செய்தது திமுக கூட்டணி.. மதுரை தொகுதி சு. வெங்கடேசன் அபார வெற்றி.! 

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தர்மபுரி தொகுதியில் பாஜக - பாமக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

கனிமொழி 2.8 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: இந்நிலையில், திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 536008 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தோற்கடித்து கனிமொழி வெற்றி அடைந்துள்ளார். காலை முதலாக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.