Karur Student Request: கள்ளபருப்பு வாங்கி சாப்பிட்டு தொண்டையில் சிக்கிய ஸ்டேப்ளர் பின்.. கதறக்கதற அவதிப்பட்ட சிறுவன்.. ஆட்சியரிடம் மனு.!

நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிட ஆசைப்பட்ட சிறுவனின் தொண்டையில் ஸ்டேப்ளர் பின் சிக்கிக்கொள்ள, 4 மணிநேரம் போராடி உயிரை காப்பாற்றிய சிறுவன் தனக்கு நடந்ததை போல வேறு யாருக்கும் நடக்க கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து நல்ல செயல்முறையை முன்னெடுத்துள்ளார்.

Karur School Student at Collector Office (Visuals from Spot)

பிப்ரவரி 08, கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியரை (Karur District Collector Office) நேரில் சந்திக்க வந்த பள்ளி மாணவர் (School Student), தனது தந்தையுடன் கைகளில் நொறுக்குத்தீனி (Snacks Pocket) பாக்கெட்டுகளை அட்டையில் நூல் ஊசி கொண்டு தைத்தவாறு இருந்த பொருட்களோடு காணப்பட்டார். அவர் ஆட்சியரை சந்தித்துவிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பள்ளி மாணவர் கூறுகையில், "எனது பெயர் ஆர்.எஸ் விஷ்வக். நான் கரூர் வெங்கமேடு (Vengamedu Village) கிராமத்தில் இருந்து வருகிறேன். நான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையின் போது பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது, பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட கள்ளப்பருப்பை வாங்கி சாப்பிட்டேன்.

அதை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் அழுதுகொண்டே பெற்றோரிடம் சென்று விஷயத்தை தெரிவித்தது, அவர்கள் என்னை உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைக்கு (Hospital) அழைத்து சென்றார்கள். அவர்கள் சோதித்து பார்த்துவிட்டு தொண்டைக்கான சிறப்பு மருத்துவரை அணுகச்சொல்லி அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, எனது அப்பா கோவையில் (Coimbatore Hospital) இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்தார். அங்கு மருத்துவர் முதலில் எனது வயிறை அழுத்தமாக அழுத்தி பார்த்தார். அப்போது, எனது தொண்டைக்குள் சிக்கியிருந்தது வரவில்லை. இதனால் பிரத்தியேக கருவியை உபயோகம் செய்து அதனை வெளியே எடுத்தார். Rajinikanth With Mohan Lal Films Jailer: படப்பிடிப்பு தளத்தில் மலையாள சூப்பர்ஸ்டாரும் – தமிழ் சூப்பர்ஸ்டாரும் நேரில் சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ.!

மருத்துவர் தொண்டைக்குள் (Throat) சிக்கியிருந்ததை வெளியே எடுத்தபோது அதிர்ச்சிதான் காத்திருந்தது. அதில் ஸ்டேப்ளர் பின் இருந்தது. நான் சாப்பிடும்போது கள்ளபருப்பு பாக்கெட்டில் இருந்தது தொண்டைக்குள் சென்றது தெரியவந்தது. இதனால் நான் 4 மணிநேரம் கடுமையாக அவதிப்பட்டேன்.

இதே ஸ்டேப்ளர் பின் ஒருவேளை தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் சென்று இருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்கும். இதனால் நொறுக்குதீனிகளில் ஸ்டேப்ளர் அடிப்பதை கைவிட்டு, நூல் மற்றும் கயிறு கொண்டு அதனை தைத்து கடைகளுக்கு விநியோகம் செய்ய ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனு அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 08, 2023 10:10 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement