Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!
ஆன்லைன் காதலனை நம்பி திண்டுக்கல் வந்த கேரள பெண்மணி, நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 14, திண்டுக்கல்: கேரளா (Kerala) மாநிலத்தில் உள்ள மலப்புரம் (Malapuram) மாவட்டம், மெலட்டூர் பட்டிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சிந்து (வயது 22). கடந்த ஆண்டு சிந்துவுக்கு திருமணம் (Marriage) நடைபெற்று முடிந்தது. சிந்துவின் கணவர் (Husband) வெளிநாட்டில் (Foreign) குடும்பத்திற்காக வேலைபார்த்து வருவதால், மனைவி (Wife) சிந்துவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், தனியாக வசித்து வந்த சிந்துவிற்கும், கேரளா மாநிலத்தில் உள்ள சமித் (வயது 30) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்கிடையே காதலாக (Love) மலர, தனக்கு திருமணம் ஆனது என்பதை மறந்து சிந்து இன்ஸ்டாகிராம் (Instagram) காதலனோடு பேச தொங்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமானவர் தன்னை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் நூற்பாலையில் மேலாளர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் கதையளந்து இருக்கிறார். இதனை நம்பி சமித்தின் பாசமான நயவஞ்சக பேச்சில் மயங்கிய சிந்து, கள்ளக்காதலனை (Illegal Affair) நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். Bakasuran Movie Sneak Peek: பகாசூரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு – செல்வராகவனின் அசத்தல் நடிப்பு..!
ஆவல் அதிகரித்ததும் தனது வீட்டாரிடம் கூறாமல் சிந்து திண்டுக்கல் (Dindigul) புறப்பட்டு வந்துவிட, அங்கு காதலரை காணாத காரணத்தால், அவரை கண்டறிய பெண்ணின் உதவியை நாடி இருக்கிறார். அவரும் பெண்ணின் காதல் கைகூட அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இதனால் தோழியோடு தங்கியிருந்து வேடசந்தூரில் (Vedachandur) நூற்பாலைக்கு வேலைக்கு சென்ற சிந்து, தனது காதலர் குறித்தும் விசாரித்து இருக்கிறார். இதற்கிடையே சமித் திருமணம் முடிந்து மனைவி, குழந்தையோடு வசித்து வரும் கொத்தனார் (Mason) என்பது அம்பலமானது. இதனால் மனவேதனையடைந்த சிந்து தோழியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
தனது அன்பு மனைவி எங்கு சென்றால் என தெரியவில்லையே என கடல்கடந்து பணியாற்றி வந்த சிந்துவின் கணவர், அங்கிருந்தவாறு கேரளா காவல் (Kerala Police) துறையினருக்கு புகார் அனுப்பியுள்ளார். அவர்கள் கடந்த 3 மாதமாக தமிழ்நாடு, ஆந்திராவில் (Tamilnadu & Andra Pradesh) சிந்துவை தேடி அலைந்துள்ளனர். சிந்துவின் குடும்பத்தினரும் தங்களின் பங்குக்கு அவரை தேடி திரிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சிந்துவுக்கு உடல்நிலை சரியில்லாது வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு (Vedachandur Government Hospital) சிந்து வந்துள்ளார். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவியிடம் (DSP Durga Devi IPS) தனது நிலை குறித்து கூறி கண்ணீருடன் ததும்பியுள்ளார். உண்மை நிலையை உணர்ந்த டி.எஸ்.பி, சிந்துவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 14, 2023 08:54 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)