Kodaikanal Land Fissure: திரைப்பட பாணியில் திடீரென விரிசல் விழும் நிலங்கள்; கொடைக்கானலில் பகீர் சம்பவம்.. நடப்பது என்ன?.. எம்.எல்.ஏ., எம்.பி விளக்கம்.!

கொடைக்கானல் கிளாவரைப் பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Kodaikanal Land Fissure (Photo Credit: @sachi4dgl X)

செப்டம்பர் 24, கொடைக்கானல் (Kodaikanal News): மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானலின் நகர்ப் பகுதியை ஒட்டி பல மலைக் கிராமங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலின் கடைக்கோடி கிராமமாக உள்ள தமிழக கேரள எல்லையை ஒட்டிய கிளாவரை எனும் பகுதியில் திடீரென நில வெடிப்பு (Kodaikanal Cracks) ஏற்பட்டுள்ளது. அதில் 200 அடி நீளத்துக்கு பிளவு ஏற்பட்டது. அதன் அகலம் 2 அடி வரை இருந்தது. இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ந்து போயினர். தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது வரை எந்த ஒரு நில அதிர்வு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும், தென்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர். Mohan G: பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: திரௌபதி, பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி கைது?..

இந்நிலையில் உடுமலைப்பேட்டை ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் ஆகியோரும் உடன் சென்றனர். தொடர்ந்து நில பிளவு ஏற்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மண் மாதிரிகளை புவியியல் துறையினர் சேகரித்தனர்.

பின்னர் பேசிய அவர்கள்," மண் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதியில் நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை, அதிக வெயில் மற்றும் மழை காரணமாக நிலத்தில் பிளவு ஏற்படுவது இயற்கையாகவே நடைபெறுவது தான். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மண் மாதிரி ஆய்வுக்கு பின் முழுமையான காரணங்கள் தெரிய வரும்" என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மண்ணின் தன்மை குறித்து ஆய்வு: