Krishnagiri Murder: காதல் திருமணம் செய்த மகன், உடந்தையாக இருந்த தாய் வெட்டிக்கொலை; மருமகள் கவலைக்கிடம்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!

காதல் திருமணம் செய்த மகன், அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை வெட்டி கொன்றவர் தலைமறைவாகியுள்ளார். மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

Krishnagiri Honor Killing Issue Visual | Father Dhandapani & Son Subash | Uthangarai Govt Hospital

ஏப்ரல் 15 , ஊத்தங்கரை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (Uthangarai, Krishnagiri), அருணபதி கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரின் மகன் சுபாஷ். தண்டபாணி தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் தங்கியிருந்து, பனியன் நிறுவனத்தில் (Tiruppur Cloth Company) வேலை பார்த்து வந்துள்ளார்.

தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் அருணபதி கிராமத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் (Jayankondam, Ariyalur) பகுதியை சேர்ந்த அனுஷா (வயது 25) என்ற பெண்ணுடன் சுபாஷுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக (Friendship Turns Love) மாறியுள்ளது. இதனால் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த தண்டபாணி, இருவரும் வெவ்வேறு (Caste Issue) சமூத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை கைவிட மகனிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அதனை சுபாஷ் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் காதலித்த அனுஷாவை திருமணம் (Marriage) செய்து, அருணபதி கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார். Bus Accident: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்து; 12 பேர் பரிதாப பலி, 25 பேர் படுகாயம்.!

Visuals from Spot

அங்கு இன்று அதிகாலை சுபாஷ், அனுஷா, கண்ணம்மாள் ஆகியோர் உறங்கிக்கொண்டு இருந்தனர். மகன் காதல் திருமணம் செய்ததில் ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி, தனது தாயாரின் வீட்டிற்கு அரிவாளோடு சென்றுள்ளார். அப்போது, மூதாட்டி எழுந்திருந்த நிலையில், தம்பதிகள் உறங்கிக்கொண்டு இருந்தனர்.

ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த தண்டபாணி, தனது மகன் மற்றும் தாயை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். அனுஷாவுக்கு வெட்டுக்காயங்கள் இருந்து உயிர் துடித்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உயிர்க்கு போராடிய அனுஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த காவல் துறையினர் சுபாஷ் மற்றும் கண்ணம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தண்டபாணியை தேடி வருகின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement