LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
இலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13, தஞ்சாவூர்: உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் (Pazha. Nedumaran) தஞ்சாவூரில் (Thanjavur Press meet) வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) அமைப்பின் தலைவர் பிரபாகரன் (LTTE Prabhakaran), அவரின் மனைவி & மகள் உயிருடன் இருக்கின்றனர். இலங்கையில் இராஜபக்சே (Rajapaksa family) குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிரபாகரனின் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளது. அவர்களின் அனுமதியோடு இத்தகவலை வெளியிட்டு இருக்கிறேன்" என பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவு வெடித்துக் கிளப்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் குழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடையகிறோம். இதுவரை அவரைப்பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். Prayagraj Teacher Video: தடியால் மாணவரை கடுமையாக தாக்கும் ஆசிரியர்.. மேஜையின் மீது படுக்கவைத்து பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுநோம்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு, எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.
தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சிமில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் அங்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 13, 2023 12:54 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)