Madurai Administration: மாற்றுத்திறனாளி முதியவரை 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்.. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் இப்படியொரு சோகம்..!
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடி வரும் மாற்றுத்திறனாளியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 14, ஆட்சியர் அலுவலகம்: மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் (Thirumangalam, Madurai) இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மதிப்பனூர் குழிபட்டி (Madippanur Village) கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி (Disabled Person) முதியவர் எம். பாண்டி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி செய்ய கூறி மாவட்ட ஆட்சியர் (Madurai Collector Office) அலுவலகத்திற்கு அழைத்து வருகிறார்.
நேற்றும் ஆட்சியரை கண்டு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்யும்படி மனு வழங்க வந்திருந்தார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் நேரில் சந்தித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், "நான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறேன்.
தற்போது வரை 3 முதல் 4 மாவட்ட ஆட்சியர்கள் (IAS Collectors) மாறிவிட்டனர். ஆனால், எனக்கு உதவி கிடைக்கவில்லை. நான் செருப்பு தைக்கும் கூலித்தொழிலாளியாக (A shoemaker) மாற்றுத்திறனாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு மாற்றுத்திறனாளி கடன், பயணசீட்டு அட்டை, 100 நாள் அட்டை உட்பட அரசு ஆவணங்களுக்கு வேண்டி மனு கொடுத்தேன்.
இன்று வரை அவை எனக்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவணத்தை கொடுத்தால், மற்றொரு ஆவணத்தில் தவறு உள்ளது, அதனை சரிசெய்து வா என கூறுகிறார்கள். திடீரென மனு எழுதி வா என்கிறார்கள். அங்கு எழுதி கொடுப்பவர், வெளியே சென்று எழுதி வாருங்கள் என்று கூறுகிறார்கள். LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
அங்கே சென்று எழுதினால் ரூ.50 கேட்கிறார்கள். சரி பணம் போனால் போகட்டும் என நினைத்தால், நான் அலுவலகத்தில் இருந்து கைகளால் தவழ்ந்து வெயிலில் வந்து எழுதி மீண்டும் அலுவலகத்தின் மாடிக்கு செல்ல வேண்டும். நானும் 10 ஆண்டுகளாக அலைந்து பார்க்கிறேன். எடுத்தோ ஒரு காரணத்தை கூறி அலையவைக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர்கள் தான் மாறிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால், என் நிலைமை மாறவேயில்லை. எனது அம்மா நகராட்சியில் (Corporation) வேலை பார்த்து வந்தார். அவரின் சலுகை பெற உரிமை உண்டு என்பதற்காக, அது தொடர்பான பென்ஷன் பணம் குறித்து கேட்டால் ரூ.10 ஆயிரம் கேட்கிறார்கள்.
நான் தினமும் செருப்பை தைத்து பிழைத்து வருகிறேன். அவ்வுளவு பணத்தை எப்படி கொடுக்க முடியும்?. இங்கு வந்து சென்றால், இவர்கள் என்னை அலைக்கழித்து ஒரேநாளில் எனது கைகளில் வெயிலால் கொப்புளம் போட வைத்துவிடுகிறார்கள். அது சரியானால் தான் பின்னர் மீண்டும் என்னால் வேலை பார்க்க முடியும். என்னைப்போன்ற சாமானியனுக்கு ஏன் இந்நிலை?. எனது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.