Petrol Bomb Blast: இளைஞர்களின் அடாவடிக்கு எதிராக புகாரளித்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையில் பயங்கரம்.!
தினமும் மதுபோதையில் வீட்டருகே தொல்லை செய்து வந்த இளைஞர்களுக்கு எதிராக புகாரளித்த பெண்ணின் வீட்டில் கும்பலாக சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
டிசம்பர், 27: தினமும் மதுபோதையில் வீட்டருகே தொல்லை செய்து வந்த இளைஞர்களுக்கு எதிராக புகாரளித்த பெண்ணின் வீட்டில் கும்பலாக சேர்ந்து பெட்ரோல் குண்டு (Petrol Bomb Explosion) வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
மதுரை மாநகரில் (Madurai City) உள்ள மத்திசியம் பகுதியில் கணவருடன் வசித்து வரும் இளம்பெண் திவ்யா. இவரின் வீட்டருகே இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை ஒலிபரப்பி ரகளை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இதனால் திவ்யா மற்றும் அவரின் கணவர் உட்பட உள்ளூர் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இளைஞர்களின் அடாவடித்தனத்தால் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என கருதி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதற்கிடையில், இளைஞர்களின் செயல்பாடுகளால் ஆவேசமடைந்த திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். Benefits Of Sapodilla: கண்கள், எலும்புகள் ஆரோக்கியம் பெற, பதற்றம் குறைய இன்றே சுவையான சப்போட்டா சாப்பிடுங்கள்..!
இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் திவ்யாவின் வீட்டிற்கு முன்பு மதுபோதையில் மீண்டும் ரகளை செய்து, காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ பற்றவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆழ்வார் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், சோணைமுத்து ஆகியோரை கைது செய்தனர். பிற இளைஞர்களை தேடி வருகின்றனர்.