Dharmapuram Adheenam Case: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரம்; ஆதீனத்தின் முன்னாள் நேரடி உதவியாளர் வாரணாசியில் கைது.!

இதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Assitant Senthil | Dharmapuram Adheenam (Photo Credit: @exmukrs / @abpnadu X).jpg

ஜூன் 11, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்யா ஸ்வாமிகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் துறையினர் பாஜக மயிலை மாவட்ட தலைவர் அகோரம், ஆடுதுறையை சேர்ந்த வினோத், திருவெண்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோவிலை சேர்ந்த குடியரசு, நெய்குப்பை பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலாவியது என்ன?.. உண்மையை உடைத்த டெல்லி காவல்துறை.! 

இவர்களிடம் நடந்த விசாரணையின் பேரில் செய்யூர் வழக்கறிஞர் ஜெயசந்திரன், தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக ஒண்டன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சி பிரபாகரன் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்த விவகாரத்திற்கு பின்னர் ஆதீனம் சார்பில் செந்திலும் பணிநீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட நபர்கள் தற்போது நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே இருக்கின்றனர்.

வாரணாசியில் பதுங்கிய செந்தில் கைது:

இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில் தலைமறிவாக இருந்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி, அரசுத்தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடவே, காவல் துறையினர் செந்திலை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை காவல் துறையினர் வாரணாசியில் பதுங்கியிருந்த செந்திலை கைது செய்துள்ளனர். விரைவில் அவர் தமிழகம் அழைத்து வரப்படவுள்ளார்.