NTK Supporter Arrested: திருச்சி எஸ்.பி வருண் குமாரை அவதூதாக பேசி கொலை மிரட்டல்; நா.த.க நிர்வாகி கைது.!
சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தெரிவித்த சர்ச்சை பதிலால், வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 14, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வருண்குமார் (Varunkumar IPS) ஐபிஎஸ், எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வப்போது சமூக நலன் சார்ந்த விஷயங்கள், செய்திகளை அவர் பகிர்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 04ம் தேதி அவர் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அந்த பதிவுக்கு அரசியல்கட்சிப்பிரமுகர் ஒருவர் பதில் அளித்து இருந்தார். அப்பதிவுக்கு நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஒருவர் பதில் அளித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சிப்பிரமுகர் கைது:
இந்த பதில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் இருந்த நிலையில், உச்சகட்ட கோவத்தில் எஸ்.பி-ஐயும் அவதூறாக வசைபாடி இருக்கிறார். மேலும், கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி தில்லை நகர் காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சைபர் கிரைம் அதிகாரிகள் உதவியுடன் நாம் தமிழர் கட்சியின் பிரமுகருக்கு வலைவீசப்பட்டது. TN Weather Update: காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
திருச்சி அழைத்து வந்து விசாரணை:
அதன்படி, சம்பந்தப்பட்ட பிரமுகர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. இவரை நேற்று அதிகாரிகள் கைது செய்தனர். தன்னை காவலர்கள் தேடுகிறார்கள் என்பது கூட தெரியாமல், ரேஷன் கடையில் இருந்தவரை அதிகாரிகள் கைது செய்ததாக கூறப்படுகிறது. கைதான நபரை திருச்சி அழைத்து வந்த அதிகாரிகள், விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணனின் மீது அரசு அதிகாரியை மனஉளைச்சல் ஆக்குதல், பணிசெய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வார்த்தைகளில் கவனம் தேவை:
சமூக வலைத்தளங்களில் நாம் கூறும் பதில்கள் சாட்சிகள் போல அமையப்பெறும் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பு மற்றும் நலன் கருதி மரியாதை மிகுந்த கண்ணிய வார்த்தைகளை பயன்படுத்தி பதில் சொல்வது நல்லது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஒவ்வையை போல சொல்லை சொல்லால் அடிக்கலாமே தவிர, நாக்கூசும் வார்த்தையுடன் மிரட்டலையும் சேர்த்தால், இன்றுள்ள சட்டப்படி கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.