NIA Raid Tamilnadu: கோவை கார் வெடிப்பு சம்பவம்; 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை.!
கடந்த ஆண்டு கோவை நகரை மட்டுமல்லாது தமிழகத்தையே பெரும் பதற்றத்திற்குள்ளாக்கிய குண்டு வெடிப்பு விவகாரத்தில், என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 10, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டை ஈஸ்வரன் முன்பு, கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்து சிதறியது. விசாரணையில், சதிச்செயலுக்காக வெடிபொருட்கள் எடுத்து செல்லப்பட்டபோது, சதிச்செயலை அரங்கேற்ற எடுத்துச்செல்லப்பட்ட நபரின் உயிரை பறித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சமோசா மோபின் என்ற நபர் உயிரிழந்த நிலையில், 13 பேர் அதிரடியாகவும் கைது செய்யப்பட்டனர். Lucky Lizard: தஞ்சை பெரியகோவிலில் குவியும் கூட்டம்… நினைத்ததை நிறைவேற்றும் பல்லி..!
கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை: இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency NIA) அதிகாரிகள் தங்களின் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன.
உக்கடத்தில் சோதனை: கோவையில் உள்ள உக்கடம், போத்தனுர், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் சோதனை தொடருகிறது. முதற்கட்டமாக உக்கடம் அல் அமீர் காலனியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் சோதனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இவர்கள் தொடர்பில் இருந்தாரா? என்பது உட்பட பல்வேறு கேள்விகளுடன் சோதனை தொடருகிறது.
சோதனை நிறைவு பெற்றதும் அதிகாரிகளின் சோதனைக்கான காரணமும், அதனைதொடர்ந்த கைது நடவடிக்கை குறித்த தகவலும் தெரிவிக்கப்படும்.