Lucky Lizard: தஞ்சை பெரியகோவிலில் குவியும் கூட்டம்... நினைத்ததை நிறைவேற்றும் பல்லி..!
தஞ்சாவூர் உள்ள பெரியகோவிலில் உள்ள வேப்பமரத்தில் உள்ள பல்லியை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
பிப்ரவரி 09, தஞ்சாவூர் (Thanjavur): உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கருவூரார் சன்னதிக்கு பின்புறம் ஒரு வேப்பமரம் உள்ளது. அந்த கருவூரார் சன்னதியை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மரத்தில் பல்லி (Lizard) இருக்கிறதா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை அந்த மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்புகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பல்லியை பார்க்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் உள்ளூர்வாசிகளை பார்த்து சுற்றுலா பயணிகளும் இணைந்து அந்த பல்லியை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். New Honda Stylo 160cc Scooter: ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!
ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை கூறும் குருவாக கருவூரார் என்றழைக்கப்படும் கருவூர் சித்தர் இருந்துள்ளார். இவர் தான் மரத்தில் பல்லியாக காட்சி அளிப்பதாகவும் சிலர் நம்புகின்றனர். மேலும் ஆலோசனைப்படி இந்த பிரம்மாண்ட கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாகவும் கூறப்படுகிறது.