![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/02/Honda-Stylo-380x214.jpg)
பிப்ரவரி 09, புதுடெல்லி (New Delhi): உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) ஹோண்டா ஸ்டைலோ 160 (Stylo 160) எனும் ஸ்கூட்டரை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் புதுமுக 160 சிசி ஸ்கூட்டர் (160CC Scooter) ஆகும். இந்த வாகனத்தை ஹோண்டா நிறுவனம் இந்தோனேசியாவிற்காக தயார் செய்திருக்கின்றது. Smartphone Overheating: ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகிறதா.? வெடிக்காமல் தடுபதற்கான டிப்ஸ்..!
சிறப்பம்சங்கள்: வித்தியாசமான இன்டிகேட்டர் அமைப்பு, உடல் நிறத்திலான சைடு வியூவ் மிர்ரர், மாற்று வண்ணத்திலான இருக்கை, குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்ட பேனல் கொண்ட தனித்துவமான ஹெட்லைட், வாத்தின் பின்புறத்தைப் போன்ற டெயில் பகுதி போன்றவற்றால் ஸ்டைலோ 160 மிகவும் ஸ்டைலான வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இத்துடன், அலாய் வீல், கலர்ஃபுல் ரியர் வியூவ் மிர்ரர், ரிமோட் கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஸ்மார்ட் சாவி, ரப்பர் ஸ்டாண்டு பேட், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ஆப்ஷன், டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இது 16 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மைலேஜ் திறன் லிட்டர்ககு 45 கிமீ ஆகும்.