Tasmac Seller Attacked: ஜி-பே இல்லை என கூறியதால் டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல் - மது குடிக்க முடியாத விரக்தியில் ஆசாமி தெளிவாக வெறிச்செயல்.!

தனது கடையில் ஜி-பே இல்லை என்பதால் மதுபானம் தர இயலாது. பணத்தை எடுத்து வாருங்கள் என்று கூறியதால், மர்ம ஆசாமி டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Google Pay | Tamilnadu Tasmac File Picture (Photo Credit: Google Pay / The Hindu)

பிப்ரவரி 18: இன்றுள்ள நவீன யுகத்தில் உலகளவில் பணப்பரிமாற்றம் (Digital Transaction) என்பது டிஜிட்டல் மயமாகிவிட்டது. பணம் இல்லாமல் உலகம் (World) செயல்படாது என்ற நிலை மாறி, டிஜிட்டல் பணம் இல்லாவிடில் உலகம் இயங்காது என்று நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு பயனரும் தனது தனிப்பட்ட விபரங்களை ஆண்ட்ராய்ட் போன்களில் (Android Mobiles) பதிவேற்றுகின்றனர்.

ஆண்ட்ராய்ட் போன்களின் உலகளாவிய அறிமுகம், ஒவ்வொரு தனிமனிதரையும் டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. தள்ளுவண்டி கடை முதல் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரையில் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை உபயோகம் செய்து வருகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெறுவதால் பயனர்களும் அதிகரிக்கின்றன.

பல இடங்களில் கூகுள் பே, போன் பே, பே பால், பிஎச்ஐஎம் (Google Pay, Phone Pay, Pay Pal, BHIM Apps) செயலிகள் உபயோகத்திற்கு வந்துள்ளதால், ரூ.10க்கு வாங்கும் பொருளுக்கு கூட ஆன்லைன் பேமெண்ட்களை செய்து வருகிறோம். மதுபானம் அருந்த டாஸ்மாக்கில் இன்று வரை அப்படியான நடவடிக்கை எட்டும் எடுக்கப்படவில்லை. ஆனால், டாஸ்மாக்கை (TASMAC) நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பெரம்பலூர் (Perambalur) மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இன்னாசி (வயது 37). இவர் அன்னமங்கலம் அரசு டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அங்கு பெரம்பலூர் வேப்பந்தட்டை கல்பாடி கிராமத்தை சேர்ந்த மணிதேவன், பெரம்பலூர் மூர்த்தி ஆகியோர் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளனர். Migrates Died Container Lorry: ஆப்கானிய அகதிகள் 18 பேர் பல்கெரியாவில் பலி.. மூடிய கண்டெயினருக்குள் பிணத்துடன் பயணித்த 34 பேர்.. நடுங்கவைக்கும் பயங்கரம்.!

அந்த சமயத்தில் இன்னாசி விற்பனையாளர் மணிதேவனிடம், "தன்னிடம் பணம் இல்லை. ஆனால், கூகுள் பே-வில் பணம் இருக்கிறது. நான் அதில் பணம் அனுப்புகிறேன். எனக்கு குவாட்டர் தாருங்களேன்" என கேட்டுள்ளார். விற்பனையாளர் மணிதேவன் கூகுள் பே வசதி இங்கு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மதுபானம் அருந்த முடியவில்லையே என ஆத்திரமடைந்த இன்னாசி, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று டாஸ்மாக் கண்ணாடியை உடைத்து, இன்னாசியின் முகத்தில் குத்திவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணிதேவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பெரம்பலூர் அரசு (Perambalur Government Hospital) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக அரும்பாவூர் காவல் துறையினர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படியான சம்பவம் டாஸ்மாக் விற்பனையாளர்களிடையே லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 18, 2023 04:11 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now