En Mann En Makkal Yatra: திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பொங்கிய பிரதமர் நரேந்திர மோடி; பல்லடத்தில் பரபரப்பு உரை.. முழு விபரம் இதோ.!
அதனாலேயே பாஜக கட்சியை தமிழக மக்கள் தங்களின் இதயத்தில் வைத்து செயல்படுகின்றனர். பாஜகவும் தமிழக மக்களை இதயத்தில் வைத்து செயல்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
பிப்ரவரி 27, திருப்பூர் (Tiruppur): தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகன் (L Murugan) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வேல் யாத்திரை, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தது. அதனைத்தொடர்ந்து, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கத்தொடங்க, தமிழ்நாடு பாஜக தலைமை பொறுப்பு அண்ணாமலை வசம் சென்றது. அண்ணாமலையின் (Annamalai) கீழ் தமிழ்நாடு பாஜக (TN BJP) வந்ததும், கட்சியின் அலுவல் ரீதியான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டன. எல்.முருகனை போல, அண்ணாமலையும் 'என் மண் என் மக்கள் (En Mann En Makkal Yatra)' என்ற பெயரில் பிரம்மாண்ட யாத்திரை ஒன்றுக்கும் ஏற்பாடுகளை செய்திருந்தார். கடந்த 28 ஜூலை 2023 அன்று பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா அண்ணாமலையின் யாத்திரை பயணத்தை தொடங்கி வைத்தார். 234 சட்டப்பேரவை தொகுதியிலும் தொடர்ந்து தீவிர யாத்திரை மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவை பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்டது.
'பாரத் மாதா கி ஜெ' கோஷத்துடன் உற்சாக வரவேற்பு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 27ம் தேதியான இன்று 'என் மண் என் மக்கள்' யாத்திரை பிரச்சாரம் நிறைவு விழா பல்லடம் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு யாத்திரையை நிறைவு செய்து இருந்தார். பிரதமருக்கு வரும் வழியெல்லாம் பூக்கள் தூவி, 'பாரத் மாதா கி ஜெ' கோஷத்துடன் உற்சாக வரவேற்பும் வழங்கப்பட்டது.
இன்னும் 60 நாட்கள் அயராது உழைக்க வேண்டும்: இறுதி பரப்புரை பயணத்தின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! நம்முடைய பாஜக கட்சியின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. நம்மை ஆசி செய்ய, அன்பை பொழிய பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். கட்சியின் தொண்டர்கள், மூத்த தலைவர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றி. சரித்திரத்தில் நாம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறோம். இவ்வுளவு ஆண்டுகள் எதற்காக காத்திருந்தோமோ, அது நம் கண்முன் இருக்கிறது. 60 நாட்களில் தொடர்ந்து 400 எம்.பிக்களை தாண்டி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியில் அமரும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களும் இடம்பெற வேண்டும். கடுமையாக யாத்திரைக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் உழைத்துள்ளோம். நமது பணி இன்னும் 60 நாட்கள் இருக்கின்றன. அதுவரை நமக்கு ஓய்வு இல்லை. அதனை நீங்கள் செய்துகாட்ட வேண்டும். 10 ஆண்டுகள் கழித்து திரும்பிப்பார்க்கையில், தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது, அவர்களுடன் நாம் இருந்தோம் என இருக்க வேண்டும். 234 தொகுதிகளில் அனைவரையும் பார்த்தோம். Rajinikanth Upcoming Film Update: பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து படம் நடிக்கும் ரஜினிகாந்த்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசும் - காரணமும்: மஞ்சள் ஏற்றுமதிக்கு பெரியளவு உறுதுணை புரிந்ததற்காக மஞ்சள் மாலை பரிசு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின சகோதர - சகோதரிகளுக்காக செய்யப்படும் உதவிகளை வெளிப்படுத்த தோடா சால்வை அணிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு மோடி மட்டுமே காரணம். காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு, பிரதமர் மோடியின் தலைமையில் மட்டுமே கிடைத்தது. அதற்கு ஜல்லிக்கட்டு காளை பரிசு வழங்கப்பட்டுள்ளது. பொய் பரப்புரைகளுக்கு நாம் இடமளிக்க கூடாது. தொடர்ந்து மூன்றாவது முறை நாமே ஆட்சியை அமைப்போம். நிச்சயம் 35 தொகுதிகளை தாண்டி நாம் அடுத்த 60 நாட்கள் அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். பாஜக உங்களோடு இருக்கும், நீங்கள் கனவுகாணும் தமிழகம் உருவாக்கப்படும், அந்த சத்தியத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன், பாரத் மாதா கி ஜெ" என பேசினார்.
தமிழகம் தேசியத்தின் பக்கம் - பிரதமர் நெகிழ்ச்சி: அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வணக்கம்! பல்லடத்திற்கு வருகை தந்து, உங்கள் முன்பு இருப்பதை பெருமையாக உணர்கிறேன். கொங்கு பகுதி இந்தியா மட்டுமல்லாது தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பகுதியாக இருக்கிறது. தொழில்களில் வளர்ச்சிபெற்ற பகுதியாக காற்றாலை மின்சாரம், ஜவுளி பூங்கா, தொழில்முனைவோருக்கு உறுதுணையாக இருக்கும் பகுதியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு மண்டலம் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. இவ்வுளவ்வு பெரிய மக்கள் கூட்டத்தை கண்டபோது, மிகப்பெரிய காவிக்கடலை கண்டதுபோல உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைவர்க்கும் எனது நன்றிகள். டெல்லியில் ஏ.சியில் அமர்ந்துகொண்டு தமிழகத்தை பார்க்கிறார்கள். ஆனால், தமிழகம் தேசியத்தின் பக்கம் இருப்பதை வந்துள்ள கூட்டம் உறுதி செய்துள்ளது. எனக்கு தமிழகத்தில் 5 விஷயங்கள் குறித்து கூறுவதை பெருமையாக உணர்கிறேன். 2024 ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
அண்ணாமலைக்கு வாழ்த்து: தமிழ்நாடு நாட்டின் அரசியல் வளர்ச்சியில் புதிய உத்வேகத்துடன் மையமாக மாறி வருகிறது. வரும் 2024 ம் ஆண்டு புதிய சரித்திரத்தை தமிழ்நாடு படைக்கும். அதற்கு முன்னோடியாக 'என் மண் என் மக்கள்' யாத்திரை வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. அனைத்து சகோதர சகோதரிகளும் அளித்த ஆதரவு, வரலாற்றில் இல்லாத ஆதரவு ஆகும். என் மண் என் மக்கள் பயணத்தின் பெயரே சிறப்பு வாய்ந்தது. இது ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் - மண்ணுக்கும் உள்ள பிணைப்பை காண்பிக்கிறது. ஒவ்வொரு பாஜக தொண்டரும், மண்ணும் கடவுளுக்கு சமமானவர்கள். நாடுதான் முதன்மையானது என பாஜக கருதுவது மட்டுமல்லாது, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாஜக உழைக்கிறது. நான் இப்பகுதியில் பாஜகவுக்கு ஆதரவு வந்துள்ளதை நான் அறிவேன். இந்த யாத்திரையை தலைமை தாங்கி நடத்தி வந்த எனது சகோதரர், ஆற்றல் மிக்க, துடிப்புமிக்க அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் அனைவருக்குமான வளர்ச்சி, நம்பிக்கையை வீடு-வீடாக கொண்டு சேர்த்துள்ளார். Santhanam Next Movie Update: அப்படிப்போடு.. சந்தானத்தின் அடுத்த படம் பெயர் என்ன?.. வெளியிடும் கமல் ஹாசன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
32 ஆண்டுகள் முன் நடந்ததை நினைவுகூர்ந்த மோடி: தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு நெருக்கமானது, சிறப்பு வாய்ந்தது. அதனாலேயே ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்கவிதைகளை படித்தேன். அதனை கேட்டபின்னரே வெளிநாட்டிலும் இதனை கேட்க இயலுமா? என கேட்டார்கள். எனது நாடாளுமன்ற தொகுதியில் காசி தமிழ் சங்கமம் செய்வது குறித்து கேட்டார்கள். பாராளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோலை உயர்த்த இடத்தில் வைத்து மிகப்பெரிய மரியாதையை உருவாக்கி தந்துள்ளேன். இதனால் தமிழக மக்கள் ஆர்வமாக இருப்பது மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் அன்பு கொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியும். தமிழ்நாட்டிற்கும் - எனக்கும் இது அரசியல் உறவு இல்லை. இது மனதுடன் உள்ள இதயத்திற்கான உறவு. நான் தமிழ் மண்ணுடன் பல ஆண்டுகளாக பின்னிப்பிணைந்து இருக்கிறேன். தமிழ் மண் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அன்பை வழங்கி இருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு முன்பு 1991 ம் ஆண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து ஏக்தா யாத்திரை தொடங்கி காஷ்மீரில் முடிந்தது. அதனை நான் வழிநடத்திச்சென்றேன். யாத்திரையை வழிநடத்தும்போது எனது மனதில் காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும், காஷ்மீர் சட்டம் 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என எண்ணினேன். இன்று மூவர்ணக்கொடி அங்கு பறக்கிறது, 370 சட்டம் தூக்கப்பட்டு குப்பையில் போடப்பட்டுள்ளது. அதனைப்போல என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தை புதிய பாதையில் அழைத்து செல்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்காத காங்., திமுக அரசு: தமிழ்நாட்டில் பாஜக என்றும் ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், தமிழ்நாடு பாஜகவின் இதயத்தில் இருக்கிறது. இது ஒவ்வொரு சகோதர - சகோதரிகளுக்கும் தெரிந்ததால் தான், பாஜகவுக்கு ஆதரவு பெருகுவதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களிடையே பொய்களை கூறி நாற்காலிக்காக சண்டையிட்டு, அதனை காப்பாற்ற பொய்களை கூறி வருகிறார்கள். மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி பிளவுபடுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் தூய்மை, மிகசிறந்த அறிவாளிகள் ஆவார்கள். எதிர்க்கட்சியின் நாடகம் வெளிய வந்து, அவர்களின் ஊழலும் தெரியவந்துள்ளது. இதனாலேயே பாஜக மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வருகிறது. தமிழகத்தில் வளர்ச்சிக்காக பாஜக கட்சி முன்னுரிமை அளித்து வருகிறது. 2004 ம் ஆண்டு முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்தபோது கொடுத்ததை விட, நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு மூன்று மடங்கு அதிக தொகையை வளர்ச்சிக்காக வழங்கி இருக்கிறது. திமுக - காங்கிரஸ் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்துகொண்டு, கடந்த ஆட்சியில் மந்திரி சபையில் முக்கிய பொறுப்பை வைத்திருந்த திமுக கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த பிரதமர்: மோடி ஏழைகளுக்காக கடுமையாக உழைக்கிறார். இதனாலேயே இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மோடியின் உத்தரவாதம் என்று கூறினால், 3 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம், 40 இலட்சம் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வழங்குகிறோம், 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கிராமப்புறத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மோடியின் உத்திரவாதம் என்பது ஒருசில நபர்களுக்கானது இல்லை. அது மக்களுக்கானது. அதனை நாடு புரிந்துகொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நான் வந்தபோது எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. நான் அவர் பிறந்த இலங்கைக்கு சென்றபோது, கண்டிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மக்களிடம் நான் பேசும்போது கண்டியில் இருந்து வந்து தமிழ்நாட்டில் நல்லாட்சி வழங்கி கல்வி, சுகாதாரத்தை வழங்கிய எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் மதித்ததாக கூறினேன். அதனாலேயே அவரை இன்று வரை மக்கள் ஒப்பற்ற தலைவராக போற்றுகிறார்களால். எம்.ஜி.ஆர் குடும்ப அரசியலால் ஆட்சிக்கு வராமல், திறமையின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால், இன்று திமுகவால் எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஆட்சி நடக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பின் நல்லதொரு ஆட்சியை கொடுத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தனது வாழ்நாட்களை தமிழ் மக்களுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக வழங்கினார். சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இன்று இந்த இருபெரும் தலைவர்களுக்கு இங்கிருந்து அஞ்சலியை செலுத்துகிறேன். ஜெயலலிதாவுடன் நான் பல ஆண்டுகள் பணியாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆர் கொள்கைகளை கடைபிடித்து மக்களின் நலன், வளர்ச்சிக்காக பணியாற்றுவோம். Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.!
இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A) எதிராக சாட்டையடி பேச்சு: மோடியின் உத்திரவாதம் என்பது நாட்டின் வளர்ச்சி என்பதை போல, தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அமையும். தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் மீது மரியாதை வைத்துள்ளார்கள். அதனாலேயே தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்சாலை அமைக்கும் இடமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. அதில் இருந்து இராணுவ தளவாடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஜவுளி உற்பத்தியிலும் தமிழ்நாடு முழு பலனை பெறுகிறது. இன்று உருவாகியுள்ள I.N.D.I.A கூட்டணி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கைப்பற்றிவிடும் எண்ணத்தில் இருக்கிறார்கள். இவர்கள் வளர்ச்சியை கைப்பற்றினால், முதலீடுகள் இருக்காது. முந்தைய ஆட்சியில் இராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் வாங்கும்போது, கோடிக்கணக்கில் கமிஷன் பெற்ற காங்கிரஸ் அரசு ஊழலற்ற ஆட்சி நடத்துமா?. இதனை நாம் யோசித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் செயல்பாடுகளால் 2 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் வாயிலாக 2 இலட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் கிடைக்குமா?. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நான் உழைப்பதால் எதிர்க்கட்சிகள் என் மீது கோபத்தில் இருக்கிறது.
உங்களுக்கான உத்தரவாதம் நான்: நாம் புதிய பாரதத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாட்டின் வளர்ச்சி, விவசாய திட்டங்கள், பெண்கள் வளர்ச்சி, மீனவர்கள் வளர்ச்சி உட்பட பல திட்டங்களை நான் கொடுக்கிறேன். என் மீது அவதூறு பரப்பி, பொய்யான தகவலை பரப்ப அவர்கள் முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கொள்ளையடிக்க மட்டுமே காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கொள்ளை கூட்டணியை நாம் பூட்ட வேண்டிய நிலை வந்துள்ளது. டெல்லியில் இருப்போருக்கு இந்தியா கூட்டணி வெற்றிபெறாது என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கொள்ளையடிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. அதனாலேயே நான் 2024ல் கொள்ளை கூட்டணியை பூட்ட, என் மண் என் மக்கள் யாத்திரை அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டார்கள். பாஜக தொண்டர்கள் மூன்றாவது முறையாக நல்லதொரு ஆட்சியை அமைக்க, மக்களிடம், வீடு-வீடாக சென்று வாழ்த்துலகை பெறவேண்டும். இலட்சக்கணக்கான மக்களை பார்த்து நான் கூறுகிறேன், உங்களுக்கான உத்தரவாதம் மோடியிடம் உள்ளது. அதனை நான் உறுதிபட கூறுகிறேன். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம். மிக்க நன்றி" என பேசினார்.