Boy Killed By Strangulation Near Karaikal: தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி.. தட்டிக்கேட்டதற்காக காரைக்கால் அருகே கழுத்தறுத்து சிறுவன் கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

காரைக்கால் திருப்பட்டினத்தில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Boy Killed By Strangulation (Photo Credit: @backiya28 X)

மே 29, காரைக்கால் (Karaikal News): காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் ஹவுஸ் காலனி சேர்ந்தயை சந்தோஷ் (13) என்பவர் சக நண்பர்களோடு வீட்டின் அருகே விளையாடிய போது சிறுவனை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை தேடி வந்த நிலையில் முன்தின இரவு வீட்டின் அருகே சிறுவன் கழுத்து அறுபட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பலியான சிறுவன் சந்தோஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சந்தோஷ் வசித்து வந்த திருப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருடன் சந்தோஷ் விளையாடியதை அப்பகுதியினர் பார்த்ததாகவும், அதைத்தொடர்ந்து கொலை நடைபெற்றுள்ளதால் அந்த இளைஞரே சந்தோஷை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியது. Father Suicide In Premature Baby Death: 7 மாதத்தில் பிறந்த குழந்தை இறப்பு; மன வேதனையில் தந்தை தற்கொலை..!

இதற்கிடையே தான் கொலையான 13 வயது சிறுவனின் தாய் கண்ணீர் மல்க 17 வயது சிறுவன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛என் மகனை கொலை செய்தவன் என் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். தங்கையிடம் ஏன் தவறான கண்ணோட்டத்தில் அழைத்தாய் என என் மகன் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமான அந்த நபர் என் மகன் வாயை பொத்தி கத்தி வைத்து வெட்டியுள்ளார். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க துணியை வைத்து வாயை அடைத்துள்ளார். என் பையனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.