Palamedu Jallikattu Arvind Died: 10வது காளை பிடிக்க தயாராகியவரை துள்ளிக்குதித்து முட்டித்தூக்கிய காளை.. பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!

பொங்கல் பண்டிகையால் ஊரே சந்தோஷத்தில் இருக்க, மகன் வெற்றி பெற்று தாய்க்கு இன்ப அதிர்ச்சி பரிசு கொடுக்கலாம் என நினைத்திருந்த சமயத்தில் நடந்த துயரத்தால் பறிபோன உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Arvind - Jallikattu Bull (Photo Credit: Visual From Spot / Wikipedia)

ஜனவரி 16, பாலமேடு: 2023 பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இன்று காலை 07:30 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ வெங்கடேசன், பூமிநாதன் முன்னிலையில் விழாக்குழுவினர், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் தங்களின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. Actor Suriya No1: தென்னிந்தியாவில் தலைசிறந்த நம்பர் 1 நடிகராக சூர்யா தேர்வு: சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்த நிலையில், மதியம் 1 மணியளவில் 9 காளைகளை பிடித்து மூன்றாம் இடத்தில் இருந்த அரவிந்த் ராஜன் என்ற மாடுபிடி வீரரை காளை முட்டி தூக்கியத்தில் அவர் படுகாயம் அடைந்தார். விரைந்து மீட்கப்பட்ட அரவிந்த் ராஜன், முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விரைந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவல் துறையினர் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்ந்து வந்து அரவிந்த் ராஜனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அரவிந்தனின் உறவினர் தெரிவிக்கையில், "தம்பி அரவிந்த் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. அவர் வேலைக்கு சென்றால் தான், அவருக்கும்-அவரின் தாயாருக்கும் சாப்பாடு. அரவிந்தனின் தாயார் உடல்நலம் குன்றியவர். மகன் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய இயலாது. அன்றாட தொழிலாளர்களாக இருந்து வந்தவரின் குடும்பத்தில் வருமானம் இனி கிடைக்காது" என்று பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 04:31 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).