Tirunelveli Thiruchendur Track Repair Work: திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் போக்குவரத்தை விரைந்து தொடங்க ஏற்பாடு; தீவிரமாக பணியாற்றும் இரயில்வே அதிகாரிகள்.!

மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சீர்படுத்துவது போல, இரயில் இருப்புப்பாதையையும் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

Alwarthirunagari Track Repair Work (Photo Credit: @ANI X)

டிசம்பர் 26, திருநெல்வேலி (Tirunelveli): கடந்த டிசம்பர் 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில், இலங்கையை ஓட்டி நிலவிய வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. 100 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

வரலாறு காணாத கடும் மழை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் இருந்தும் அடுத்தடுத்து நீர் திறக்கப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து மாவட்டமே முற்றிலும் நீரால் சூழப்பட்டு திணறிப்போனது. தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம், பல்வேறு கிராமங்களை மூழ்கடித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை, திருச்செந்தூர் சாலை, கன்னியாகுமரி செல்லும் சாலை ஆகியவை துண்டிக்கப்பட்டன. Amrit Bharat Train Inside Video: அம்ரித் பாரத் அதிவிரைவு இரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் என்னென்ன?.. நேரில் பார்த்து அதிகாரிகளை பாராட்டிய மத்திய அமைச்சர்..!

மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்: அதே போல 800 பயணிகளுடன் புறப்பட்ட இரயில் சில நிமிடங்கள் தொடர்ந்து பயணித்து, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி இரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. ஆழ்வார்திருநகரியை அடுத்துள்ள பகுதியில் இரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தொங்கிக்கொண்டு இருந்தன. இந்நிலையில், தற்போது தண்டவாளத்தை சீரமைத்து இரயில் போக்குவரத்து தொடங்கும் பொருட்டு, இரயில்வே பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.