அக்டோபர் 27, வால்சால் (World News): வடக்கு இங்கிலாந்தின் வால்சாலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25) மாலை 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இன ரீதியாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், வால்சால் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கருப்பு நிற ஆடை அணிந்த நபர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்தது தெரியவந்தது. அந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை தொடங்கினர். Donald Trump: தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து.!
பாலியல் குற்றவாளி கைது:
இதனையடுத்து, இன்று மாலை சிசிடிவி காட்சியில் இடம்பெற்றிருந்த அந்த 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.