Google Doodle Celebrates Idli (Photo Credit : Google Doodle)

அக்டோபர் 11, சென்னை (Technology News): இந்திய உணவு பட்டியலில் தென்னிந்தியாவின் இட்லிக்கு தனித்துவமான இடம் இருக்கிறது. ஆரோக்கியமான, மிருதுவான இட்லியை காலை உணவாக தென்னிந்திய மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். இட்லியின் எளிமையான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மை உலகம் முழுவதும் அதன் புகழை சென்றடைய செய்துள்ளது. இதனிடையே இட்லி சாம்பார், வெங்காய சட்னியுடன் கூகுள் தனது சிறப்பு டூடுலை (Google Doodle Today) வெளியிட்டுள்ளது. தென்னிந்திய உணவு மரபின் முக்கியத்துவத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் ட்ரெண்டாகும் கூகுளின் இட்லி டூடுல் (Google Idly Doodle):

அதன்படி கூகுள் என்ற சொல்லில் உள்ள G என்ற எழுத்து அரிசியை பிரதிபலிப்பதாகவும், இரண்டு O எழுத்துக்களும் இட்லி மாவு மற்றும் இட்லி தட்டில் இட்லி சுடுவது போலவும், அடுத்த G எழுத்து மென்மையான இட்லியை பிரதிபலிக்கும் விதமாகவும், L என்ற எழுத்து இட்லி பொடி, சாம்பார், சட்னியை பிரதிபலிக்கும் விதமாகவும், இறுதியாக E என்ற எழுத்து இலையில் இட்லியை வைத்து சாப்பிடுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டூடுல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Comet AI Browser: குரோமுக்கு போட்டியாக களமிறங்கியது Comet ப்ரவுசர்.. வசதிகள் ஏராளம்.. இப்போதே ட்ரை பண்ணுங்க.!

இட்லியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்:

இட்லி தென்னிந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. இதில் கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து இருப்பதால் ஆரோக்கியமான காலை உணவில் ஒன்றாக மக்களால் விரும்பப்படுகிறது. இட்லி சாம்பார், சட்னி மற்றும் பொடியுடன் பரிமாறும் போது அதன் சுவை உயர்வதாக பலரும் தெரிவிக்கின்றனர். மேலும் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கொண்டு புளித்த மாவிலிருந்து சமைக்கப்படும் இட்லி தனித்துவமான சுவையையும் கொண்டுள்ளது.

தனுஷின் இட்லி கடை படம் காரணமா?

சமீபத்தில் தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இட்லி மீண்டும் பேசு பொருளானது. இதனால் கூகுள் தனது சிறப்பு இட்லி டூடுலை வெளியிட்டு இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை முதல் கூகுளின் சிறப்பு இட்லி டூடுல் இணையம் முழுவதும் ட்ரெண்டாகி பலரும் #இட்லி என்ற ஹேஷ்டாக்குடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

தென்னிந்திய உணவை சிறப்பித்த கூகுள்: