Salem Shocker: போதையில் இருந்து விடுபட எண்ணிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி: மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் பயங்கரம்.!
மறுவாழ்வு மையம் என்ற பெயரில், நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் அடித்தே கொல்லப்பட்ட அப்பாவியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
டிசம்பர் 02, சேலம் (Salem Crime News): சேலம் மாவட்டத்தில் உள்ள மோட்டூர் பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரின் மகன் பூபதி (வயது 32). அப்பகுதியில் கடந்த 8 மாதமாக போதை மறுவாழ்வு மையத்தினை (Drug Re Habitation Center) நடத்தி வருகிறார். அங்கு மதுவுக்கு அடிமையாகி விடுபட நினைக்கும் நபர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
மறுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்: இந்நிலையில், இளம்பிள்ளை நடுவனேரி, வேல்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரின் மகன் சந்திரசேகர் (வயது 29). மதுபோதைக்கு அடிமையான சந்திரசேகரை திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட குடும்பத்தினர், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி செய்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சமாளிப்பு: கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் சந்திரசேகரின் உறவினர்களுக்கு தொடர்பு கொண்ட மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர், சந்திரசேகருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். பதறியபடி அங்கு சென்ற குடும்பத்தினருக்கு சந்திரசேகரின் இறப்பு செய்தி கிடைத்துள்ளது. Chennai Shocker: கல்லூரி மாணவியான காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்: அறை எண் 201ல் நடந்தது என்ன?.. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்.. பதறவைக்கும் சம்பவம்.!
உடலில் காயங்கள்: இதனால் அவரின் சடலத்துடன் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், உடலில் காயங்கள் இருப்பதை கவனித்துள்ளனர். இதனையடுத்து, மகுடஞ்சாவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்: மேலும், சந்திரசேகரின் உறவினர்கள் நடத்திய சோதனையில், அவரை போதை மறுவாழ்வு மைய அதிகாரிகள் தாக்கியதும் அம்பலமாகியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சியில் கை-கால்களை கட்டிப்போட்டு சந்திரசேகர் தாக்கப்பட்ட காட்சிகளும் பதிவாகியுள்ளன.
போதை மறுவாழ்வு மையத்தில் நடப்பது என்ன?: இம்மையத்தில் 24 பேர் மதுபோதையில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவர்களும் தாக்கப்பட்டனரா? என விசாரணை நடந்து வருகிறது.