Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை - ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து அனுப்பட்டுள்ள லிங்க் என எண்ணி, அதனை அழுத்தி உள்நுழைந்த இளைஞர் ரூ.1 இலட்சம் கடன் வாங்கியதாக அதனை மாதத்தவனையில் செலுத்தசொல்லி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 17, சேலம்: ஆன்லைன் வழியில் (Online Scam) நடக்கும் பல மோசடி சம்பவங்களில், தற்போது புது டெக்னீகை கும்பல் கையில் எடுத்துள்ளது. வாட்ஸப்பில் (WhatsApp Link Scam) லிங்கை அனுப்பி வைத்து கிளிக் செய்ததும் போட்டோவை பெற்று பணம் பறிக்கும் செயல் நடப்பது அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மோசடிகளில் சிக்கினால் எவ்வித தயக்கமும் (Complaint Online Scam) இன்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தவறினால் பணத்தை இழக்க நேரிடும்.
சேலம் (Salem) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு இளைஞர் செய்தியாளரை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடையே கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடியை (Magudanchavadi) சேர்ந்தவர் சௌந்தர். சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார். இவருக்கு பிப்ரவரி 16ம் தேதியான நேற்று மாலை வாட்ஸப்பில் (WhatsApp) ஐசிஐசிஐ வங்கியின் (Fake Link Name of ICICI Bank) பெயரில் லிங்க் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை அறியாத சௌந்தர் லிங்கை கிளிக் செய்துள்ளார்.
அந்த லிங்கை தொட்டு உள்ளே சென்றதும், நீங்கள் எங்களிடம் ரூ.1 இலட்சம் கடன் வாங்கியுள்ளீர்கள். மாதம் ரூ.6,800 தவணை தொகை செலுத்தவேண்டும். தவணைத்தொகையை செலுத்தவில்லை என்றால், உங்களின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தளத்தில் (Intimation) வெளியிடுவோம் என மிரட்டுகிறார்கள். Disney Hotstar Down: உலகளவில் முடங்கியது ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம்.. பயனர்கள் அவதி.!
உங்களது நண்பர்கள், குடும்பத்தினர், சொந்தபந்தங்களுக்கும் அனுப்புவோம் என மிரட்டுகிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். வாட்ஸப்பில் அவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்.
நான் பணம் அனுப்ப மறுப்பு தெரிவித்தால், எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டுகிறார்கள்" என கூறினார். இணையவழியில் பல்வேறு குற்றங்கள் நடைபெறும் நிலையில், லிங்கை அனுப்பி அப்பாவி மக்களை மிரட்டி பணம் பறிக்க கும்பல் தயார் நிலையில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 17, 2023 04:25 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)