TN Governor on The Emergency Period of India: "இந்தியாவுக்கே துக்க நாள், இன்று கருப்பு அத்தியாயம்" - அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளில், ஆளுநர் ஆர்.என் ரவி காட்டம்.!
இராணுவத்தினர் எங்களின் புத்தகம், நோட்டுகளை கூட எடுக்க விடாமல் தாக்கிய அந்த நாளை என்னால் மறக்க இயலாது என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.
ஜூன் 25, சென்னை (Chennai): கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1977 வரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் (The Emergency in India) செய்யப்பட்டு இருந்தது. இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி அவசர நிலை காரணமாக, 21 மாதங்கள் எதிர்க்கட்சிகள் இரும்புக்கரம் கொண்டு ஒதுக்கப்பட்டனர். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனம் உள்நாட்டு குழப்பம் காரணமாக, அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 25 ஜூன் 1975 முதல் தொடங்கிய அவசரநிலை பிரகடனம், 21 மார்ச் 1977 வரை அமலில் இருந்தது.
அவசரநிலை பிரகடனம்:
இடைப்பட்ட காலங்களில் ஊடகங்களின் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காந்தியின் எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டு, பல இடங்களில் மனித உரிமை மீறல்களும் நடைபெற்றன. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக அவசர நிலை பிரகடனம் இருந்தது. இந்த விஷயத்திற்கு காங்கிரஸ் அரசு தற்போது வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கிறது. Motorola Edge 50 Ultra: வெளியான மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
மிசாவில் கைதான ஸ்டாலின் (MK Stalin):
அதேவேளையில், அவசரநிலை சட்டம் அமலில் இருக்கும் போது இந்திரா காந்தி தனது 20 அம்ச திட்டங்களையும் நிறைவேற்றி இருந்தார். இந்த சமயத்தில் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தால் ஒடுக்கப்பட்டோர் என்ற அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு துணை நின்றதாகவும் காங்கிரஸ் தரப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையிலும் தொடர்ந்து என 21 மாதங்கள் அவசரநிலை பிரகடனம் என்பது நீட்டிப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுவெளிகளில், தான் மிசாவை சந்தித்தவர் என்று பெருமையாக கூறுவது, அதனால் சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்பு, அரசுக்கு எதிராக மற்றும் முக்கிய குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை அடையாளம் காணும் பொருட்டு, அவர்களின் மீது மிசா வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் பேரில் கைது செய்யப்பட்டனர். இதனையே முதல்வர் மு.க ஸ்டாலின், தான் மிஷாவை சந்தித்தவன் என பெருமையுடன் கூறுவார். அவசர நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்திலேயே முதல்வர் மு.க ஸ்டாலின் வதைக்கப்பட்டார். Survey of Women Welfare Associations: மதுவால் கணவனை இழந்து தவிக்கும் பெண்கள்.. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கத்தினர் ஆய்வு..!
டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஆக்கிரமிப்புகள் இராணுவத்தின் துணையுடன் அகற்றப்பட்டன. லட்சக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதனால் சுமார் 7 லட்சம் பேர் அன்றைய காலத்தில் இடம்பெயர்ந்த சூழலும் உண்டானது. அரசியல்வாதிகள், தேசிய அளவிலான ஊடகங்கள் என அரசுக்கு பலரும் தேடித்தேடி வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது மிகப் பெரிய சர்ச்சை விஷயங்களாகவும் இன்றளவில் வரை தொடர்ந்து வருகிறது.
ஆளுநர் ஆர்.என் ரவி (TN Governor RN Ravi) அவசரநிலை குறித்து கருத்து:
இதன் 50 ஆண்டுகள் இன்று அடியெடுத்து வைக்கப்படும் நிலையில், வலதுசாரி அமைப்பினர் மற்றும் மிஷாவுக்கு எதிரானவர்கள் தங்களின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மிசாவினால் தான் சந்தித்த துயரங்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கூறிய தகவலை ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த எக்ஸ் பதிவில், "50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.
ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)