Motorola Edge 50 Ultra (Photo Credit: @motorolaindia X)

ஜூன் 24, புதுடெல்லி (New Delhi): மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் (Motorola launches Edge 50 Ultra), கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான நிலையில், இன்று மதியம் 12 மணி முதல், பிளிப்கார்ட் வழியாக விற்பனையை தொடங்கியது. 12ஜிபி ரேம் (LPDDR5x) + 512ஜிபி (UFS 4.0) ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.59,999 ஆகும். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.5,000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Survey of Women Welfare Associations: மதுவால் கணவனை இழந்து தவிக்கும் பெண்கள்.. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கத்தினர் ஆய்வு..!

சிறப்பம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய ஹலோ யுஐ (ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டம்) கொண்டு இயங்குகிறது. இது 125W டர்போபவர் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 122 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எஃப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 அபர்ச்சர் கொண்ட 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது.