Scam on PM House Scheme: ஒரே பெயரில் 4 பிரதமர் வீடுகள்; பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி.. இலஞ்ச ஒழிப்புத்துறை வீடுவீடாக ஆய்வு.!

ஒரேயொரு பயனாளியின் பெயரை பயன்படுத்தி, 3 முதல் 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

PM Awas Yojana | Kilvelur (Photo Credit: Wikipedia / @pasumpon73 X)

செப்டம்பர் 02, கீழ்வேளூர் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், ஆதமங்கலம் உட்பட பல ஊராட்சிகளில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. கீழ்வேளூர், ஆதமங்கலத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் இல்லாத காலத்தில், தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மேற்பார்வையில் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.! 

வீடு-வீடாக சென்று நடந்த விசாரணை:

அந்தவகையில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில், பயனர்களின் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வீடு கட்டப்பட்டது என பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரே குடும்பத்தை சேர்ந்த வெவ்வேறு பெயர்களில் குறைந்தது 2 வீடு முதல் 4 வீடுகள் கட்டப்பட்டது என பணம் சுருட்டப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த விவகாரத்தில் 49 வீடுகளில் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சொந்தமாக வேறொரு பயனர் கட்டிய வீட்டையும், பிரதமரின் வீடு என கணக்கு காண்பித்தது மட்டுமல்லாமல், மொத்தமாக 4 முறை வீடுகளை கட்டியதாக பணத்தை சுருட்டி இருக்கின்றனர்.

இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு வீடுகளாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.