TN CM MK Stalin: "ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு" - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நன்றி.!
இதன் வாயிலாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீட்ப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 15, தலைமை செயலகம் (Chennai News): வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் (Chinese Cigreatte Lighters) தமிழ்நாட்டில் தீப்பெட்டி (Match Box Industry) உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு (Piyush Goyal) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கடந்த மாதம் 08ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
ரூ.400 கோடி அன்னையை செலாவணி வருவாய்:
தீப்பெட்டி உற்பத்தித் தொழில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது. இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குகிறது. தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது. Resignation Letter: "திரும்பி வருவேன்" பதவி விலகல் கடிதத்தில் ட்விஸ்ட் வைத்த பணியாளர்.. ஆடிப்போன நிர்வாகம்.!
ஒரு இலட்சம் தொழிலாளர்கள்:
தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் லைட்டரில், எரிபொருளின் சுகாதார தாக்கம் என்பது கண்டறியப்படவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரும் சூழல் உண்டானது. இதனால் சீன சிகிரெட் லைட்டருக்குத்தடை விதிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சீன லைட்டருக்கு தடை:
இதனிடையே, மத்திய அரசு சமீபத்தில் சீன சிகிரெட் லைட்டருக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதன் வாயிலாக இறக்குமதியும் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய - 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குறையும்" என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்விட்: