நவம்பர் 04, சென்னை (Cooking Tips Tamil): பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் காலையில் அவசர அவசரமாக எழுந்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆளுக்கு ஒருபக்கம் அலைமோதிக்கொண்டிருப்பர். ஒருபுறம் குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும் மற்றொரு புறம் குழந்தைகளுக்கு சமையலும் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும். சில சமயங்களில் நேரமும் தேவையான அளவு இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் வெறும் 30 நிமிடத்திற்குள் இந்த ரெசிபியை (Healthy Lunch for Kids Tamil) செய்து அசத்தலாம். அடுப்பில் ஒரு பக்கம் சோறு வைத்துவிட்டு மற்றொரு புறம் இதனை செய்து முடிக்கலாம். இந்த செய்தித்தொகுப்பில் 30 நிமிடத்திற்குள் செய்யும் சுவையான வெண்டைக்காய் முட்டை சோறு குறித்து காணலாம். Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
வெண்டைக்காய் - 15 முதல் 30 (தேவைக்கேற்ப)
முட்டை - 1 அல்லது 2
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
வடித்த சோறு - தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு பக்கம் சோறு வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- அரிசி வேகும் நேரத்தில் வெண்டைக்காயை பொரியலுக்கு வெட்டுவது போல வட்ட வடிவில் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்க்க வேண்டும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் வெண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பை அதிக வெப்பத்தில் வைத்து வெண்டைக்காய் பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும்.
- அடுத்து வெண்டைக்காய் வதங்கி சுருங்கியதும் அதில் 2 முட்டை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- பின் வடித்து வைத்த சோற்றில் தேவையான அளவு சேர்த்து கிளறவும்.
- அவ்வளவு தான் 30 நிமிடத்தில் வெண்டைக்காய் முட்டை சோறு தயார். இதில் வெண்டைக்காயுடன் முட்டையும் சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பர்.