IPL Auction 2025 Live

CM Trophy 2024: முதலமைச்சர்‌ கோப்பை 2024: மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம். !

தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ முதலமைச்சர்‌ கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளை சென்னை ஜவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டு அரங்கில்‌ தொடங்கி வைத்தார்‌.

CM Trophy 2024 (Photo Credit: @TNDIPRNews X)

அக்டோபர் 05, பெரியமேடு (Chennai News): தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, 2024ஆம்‌ ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர்‌ கோப்பை (CM Trophy Matches 2024)  மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளை கடந்த 10.09.2024 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில்‌ தொடங்கி வைத்தார்‌. இந்த போட்டிகள்‌ அனைத்து மாவட்டங்களிலும் 10.09.2024 முதல்‌ 24.09.2024 வரை நடைபெற்றன. 12 வயது முதல்‌ 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள்‌ 17 வயது முதல்‌ 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌ 15 வயது முதல்‌ 35 வயது வரை பொதுப்‌ பிரிவினர்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌ என 5 வகை பிரிவுகளில்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன. இதில்‌ தமிழ்நாடு முழுவதிலும்‌ இருந்து 11,56,566 நபர்கள்‌ பங்கேற்றனர்‌.

4 நகரங்களில் முதலமைச்சர் கோப்பை 2024:

மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள்‌ நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில்‌, இதில்‌ வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள்‌ முதலமைச்சர்‌ கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்‌. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ இந்த மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ அக்டோபர்‌ 4ஆம்‌ தேதி முதல்‌ 24ஆம்‌ தேதி வரை சென்னை, கோயம்பத்தூர்‌, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில்‌ நடத்தப்படுகின்றன.

35 வகை விளையாட்டுகள்:

மொத்தம்‌ 35 வகையான விளையாட்டுக்கள்‌ நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ நேற்று (04.10.2024) சென்னை ஜவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டு அரங்கில்‌ தொடங்கி வைத்தார்‌. 2024 பாரிஸ்‌ பாராலிம்பிக்‌ போட்டியில் வெள்ளிப்‌ பதக்கம்‌ வென்ற துளசிமதி முருகேசன்‌, மற்றும்‌ பிரவீன்‌ சித்ரவேல்‌ ஆகியோர்‌ தொடக்க

விழாவில்‌ ஜோதியை ஏந்திச்‌ சென்று ஏற்றிவைத்தார். இந்த போட்டிகளின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் திறமையான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க பாடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த சிறப்புக் காணொளி: