Smoking Biscuit: ஐஸ்பிஸ்கட் சாப்பிட்டால் மரணம்; தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. பெற்றோர்களே கவனம்.!
ஆகையால் கவனமாக செயல்பட வேண்டும்.
ஏப்ரல் 24, சென்னை (Chennai): கடந்த சில நாட்களாகவே சிறுவன் ஒருவர் பொருட்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்பிஸ்கட் (Ice Biscuit) ஒன்றை சாப்பிட்டபோது, அதீத குளிர்ச்சியின் காரணமாக சுவாசிக்க இயலாது அலறிய அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோவின் வாயிலாக சிறுவன் ஐஸ் பிஸ்கட் எனப்படும் லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட்டை (Liquid Nitrogen Biscuit) சாப்பிட்டது தெரியவந்தது. விடியோவை பதிவு செய்த நெட்டிசன்கள் பலரும், உறுதிப்படுத்தப்படாத விஷயங்களுடன் திரவ வடிவ நைட்ரஜன் ஆபத்தானது, அதனால் உயிரிழப்பும் ஏற்படும் என தெரிவித்து, தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து, வீடியோ தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. April 26 Release Tamil Movies: ஏப்ரல் 26 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.. திரை ரசிகர்களே கொண்டாடுங்கள்.!
தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை: இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மேற்கூறிய நிகழ்வு ஹைத்ராபாத்தில் நடைபெற்றதை உறுதி செய்தனர். மேலும், இவ்வகை ஐஸ் பிஸ்கட் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பில், "ஸ்மோக்கிங் பிஸ்கட் எனப்படும் லிக்குட் நைட்ரஜன் உயிருக்கு ஆபத்தானது. இதனை குழந்தைகள் சாப்பிட வேண்டாம். இதனால் தயாரிக்கப்படும் பிஸ்கட், மரணத்தையும் ஏற்படுத்தும். பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு இவ்வாறான பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம். Prevent Dehydration on Summer: கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனைகள்; காரணம், அறிகுறி, தடுக்கும் வழிமுறைகள் இதோ.!
அபராதம் & சிறை தண்டனை உறுதி: திரவ வடிவிலான நைட்ரஜன் பயன்பாடு தேவையான இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். பொதுஇடங்களில் அதனை பயன்படுத்தி உணவுப்பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்யக்கூடாது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உணவுப்பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்தால் ரூ.10 இலட்சம் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்மோக்கிங் பிஸ்கட் மட்டுமல்லாது, வாயில் போடப்படும் எரியும் பீடாவும் பெரிய உடல்நலம் சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்தவல்லது எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வைரல் வீடியோ உங்களின் பார்வைக்கு.. இந்நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.