Bike Ambulance: 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவு; மலைக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

மலைவாழ் மக்களுக்கு 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள்‌ (Bike Ambulance) வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக எதிர்காலத்தில் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்படவுள்ளன.

Bike Ambulance: 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவு; மலைக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!
Bike Ambulance (Photo Credit: @supriyasahuias X)

நவம்பர் 08, தலைமை செயலகம் (Chennai News): சாலைவழியில் அல்லது அவசர ஊர்திகளால் எளிதில் அணுக இயலாத, கடினமான மற்றும்‌ போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில்‌ (Hills Village) வாழும்‌ பழங்குடியினர்‌ (Tribal Villages) மற்றும்‌ இதர மக்களின்‌ அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில்‌ 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள்‌ ரூ. 1.60 கோடி செலவில்‌ வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாகனங்கள்‌ 108 அவசரகால ஊர்திகளுக்கு (108 Ambulance) இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச்‌ செல்ல வழிவகுக்கும்‌ என எதிர்பார்க்கபடுகிறது.

உயிர்கள் பாதுகாக்கப்படும்:

தமிழ்நாட்டில் மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள எளிதில்‌ அணுக முடியாத மலைக்‌ கிராமங்கள்‌ மற்றும்‌ மலைப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பழங்குடியினர்களின்‌ சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் வழியில், இப்புதிய திட்டமும் அறிமுகம் செய்யப்படுகிறது. போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில்‌ உள்ள மக்களுக்கு, குறித்த நேரத்தில்‌ உரிய மருத்துவ சேவை கிடைப்பதை இரு சக்கர அவசரகால வாகன சேவை உறுதி செய்யும்‌. இதனால் பல உயிர்களும் பாதுகாக்கப்படும். Father Killed Son: வாக்குவாதம் முற்றியதால் விபரீதம்; 47 வயது மகனை சரமாரியாக குத்திக்கொன்ற தந்தை.! 

உடனடி மருத்துவ சேவை:

நவீன முறையில்‌ உரிய மருத்துவ உபகரணங்கள்‌ பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள்‌ அடங்கும்‌. இந்த இரு சக்கர அவசரகால (Bike Ambulance in Tamilnadu) வாகனங்களின்‌ சேவை கடைநிலை பயனாளர்‌ வரை சென்றடையும்‌. இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து பயனாளிகளை மேல்‌ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்‌ செல்வதில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌.

சேவையின்‌ சிறப்பம்சங்கள்‌:

தாய்சேய்நல சுகாதார சேவைகள்‌: மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும்‌ தாய்சேய்நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவை.

அவசரகால மருத்துவப்‌ பராமரிப்பு:

மருத்துவ மற்றும்‌ எதிர்பாராத அவசரநிலைகளில்‌ உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில்‌ உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள்‌ உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள்‌ செயல்படும்‌. எளிதில்‌ அணுக முடியாத, 10 மாவட்டங்களில்‌ உள்ள மலைக்‌ கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும்‌ பழங்குடியின மக்களுக்கும்‌ மற்றும்‌ இதர மக்களுக்கும்‌ இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள்‌ உடனடி சேவை செய்யும்‌. இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில்‌ ஜிபிஎஸ்‌ (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

"பைக் ஆம்புலன்ஸ்" திட்டத்தில் முன்னதாக வாங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement