Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. "சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே" - பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!

தான் கூறியதை சரியாக புரிந்துகொள்ளாமல் பகிரப்பட்ட தகவலால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என தமிழ்நாடு - தமிழகம் விவாதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

TN Governor Palace Statement - Governor RN Ravi (Photo Credit: Wikipedia)

ஜனவரி 18, சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (R.N Ravi, Tamilnadu State Governor) கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு என்ற பெயரை விட தமிழகம் என்ற பெயர் மாநிலத்திற்கு (Tamilnadu as Tamizhagam) பொருத்தமாக உள்ளது என பேசியிருந்தார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த அரசியல் கட்சியினர், ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நினைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகிய செய்திகளால் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் சார்பு அரசியல் கட்சி இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Smartphone Battery Tips: புதிய செல்போன் வாங்கியதும் 8 மணிநேரம் கட்டாயம் சார்ஜ் போடணுமா?.. உண்மை என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., தவறு செஞ்சிடாதீங்க..! 

File Image: MK Stalin, Tamilnadu State Chief Minister, President of DMK Party.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது திராவிட மாடல் தொடர்பான வார்த்தைகளை ஆளுநர் தவிர்க்க, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவை பதிவேடு தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என அரசியல் மட்டத்தில் இந்திய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு - தமிழகம் தொடர்பான விவாதத்திற்கு ஆளுநர் மாளிகை (Tamilnadu Governor Palace Raj Bhavan) அறிவிக்கை வெளியிட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளது. அந்த அறிவிக்கையில், "நான் கடந்த ஜனவரி 4ல் கலந்துகொண்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் உரையாற்றியபோது பல தமிழ் பாடல்களில் தமிழகம் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தேன்.

அதனை வைத்து சிலர் நான் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற கூறியதாக தகவலை பகிர்ந்து சில சர்ச்சைகள் ஏற்பட்டுவிட்டன. நான் கூறியதை மடைமாற்றி புரிந்துகொள்ளாமல் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 12:53 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).