Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!

அவசர காலங்களில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமே தவிர்த்து, வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ய கூடாது. அதற்கான அனுமதி பெறவும் தேவையில்லை என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். தென்காசியில் புதுமணப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் லட்சியத்தோடு செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sylendra Babu IPS, Director General of Police (Photo Credit: Wikipedia)

ஜனவரி 30, சென்னை: தென்காசி (Tenkasi) மாவட்டத்தில் உள்ள கொட்டாங்குளம், இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த மாரியப்பன் வினித் (வயது 22). சென்னையில் (Chennai) இருக்கும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக (Engineer) பணியாற்றுகிறார். இலஞ்சியில் (Ilanji) உள்ள தென்றல் நகரில் வசித்து வருபவர் நவீன் படேல். இவரின் மகள் குருத்திகா படேல். மாரியப்பன் வினித்திற்கும் - குருத்திகாவுக்கும் ஏற்பட்ட பழக்கமானது (Love) காதலாக மாறியது.

இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து கடந்த டிசம்பர் மாதம் 27ம் நாகர்கோவிலுக்கு சென்று திருமணம் (Marriage) செய்துகொண்டார்கள். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 25ம் தேதி காதல் திருமணம் செய்த ஜோடி குற்றாலம் (Courtallam) காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராக வந்தது. மணமகன் வீட்டு தரப்பு திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், அவர்களுடன் புதுமண ஜோடி புறப்பட்டது. Thalapathi 67 Update: லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கைகோர்த்த தளபதி விஜய் – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

அப்போது, இவர்களை இடைமறித்த குருத்திகா படேலின் குடும்பத்தினர், வினீத்தின் குடும்பத்தினரை தாக்கி குருத்திகாவை தங்களோடு கடத்தி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய மறுத்ததால் தொடர் தொய்வு ஏற்பட்டது. பின்னர், இவ்விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். குருத்திகாவை தேடும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.

Love Married Couple, Tenkasi.

இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறையினருக்கு, காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு (C. Sylendra Babu, Director General of Police) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பதற்றமான விவகாரத்தில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அனுமதி என்பது தேவையில்லை. Philips Layoff: 6 ஆயிரம் பேரை பணியில் இருந்து நிறுத்தப்போகும் பிலிப்ஸ் நிறுவனம்.. அதிரடி முடிவால் சோகத்தில் பணியாளர்கள்.!

வழக்குப்பதிவு செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் துணை ஆணையர் 3 முறை கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வெளியாகிய பின்னரும் வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 30, 2023 07:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now