Online Rummy Suicide: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 இலட்சம் இழந்த இளம் வங்கி பணியாளர் தற்கொலை; சங்கரன்கோவிலில் சோகம்.!
அதன் உண்மைத்தன்மை தெரியாமல் குறுகிய காலத்தில் செல்வந்தராக எண்ணினால் பணத்தை இழந்து உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.
ஜூன் 28, சங்கரன்கோவில் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வடக்குபத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மாரிச்செல்வம் (வயது 25). இவர் தனியார் வங்கியில் வேலைபார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கிய மாரிச்செல்வம், நாளடைவில் அதற்கு முழுவதும் அடிமையாகியுள்ளார்.
இரவு-பகல் பாராது ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவர், கடன் வாங்கி முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். இவ்வாறாக அவர் ரூ.25 இலட்சம் பணத்தை இழந்ததாக தெரியவருகிறது. இது கடனில் தவிக்க வழிவகை செய்துள்ளது. Maharashtra Cabinet: பாக். கடற்படையால் மராட்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ரூ.300 குடும்பங்களுக்கு நிதிஉதவி – மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு.!
கடன் வாங்கிய தொகையில் ரூ.10 இலட்சத்தை அவர் திரும்பி செலுத்திவிட்டு நிலையில், மீதுள்ள கடன் தொகையை செலுத்த இயலாமல் திணறி வந்துள்ளார். இதனால் அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட, அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். மாரி செல்வதை மீட்ட உறவினர்கள், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், வஹக்குப்பதில்லை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.