Thanjavur Crime: விபத்தில் உயிருக்கு போராடிய காதலியை அம்போவென விட்டுச்சென்ற காதலன்; போராடி பிரிந்த உயிர்.. இது காதல் தந்த பரிசு.!
தந்தை இல்லாது குடும்பத்தை தாங்கிப்பிடித்த இளம்பெண்ணை காதல் என பேசி, இறுதியில் அவரை ஏமாற்றிய கணவனின் துரோகம் உயிர்பறித்த கொடுமை நடந்துள்ளது.
ஜூன் 01, உடையார்பாளையம் (Thanjavur Crime News): பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம். இவரின் மகள் அபிநயா (வயது 23). சண்முகசுந்தரம் உயிரிழந்துவிட்டதால், அபிநயா தனது குடும்பத்தை காப்பாற்ற வறுமை காரணமாக அரியலூரில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர், நேற்று காலை உடையார்பாளையம் சாலையில் உடலில் காயத்தோடு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரின் மகன் பார்த்திபன் (வயது 33). டிப்ளமோ பட்டதாரியான இவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர் கடையில் காசாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். Coimbatore Crime: கல்லூரி தோழியாக தாலிகட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
அப்போது, பார்த்தீபனுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்து, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி பல இடங்களுக்கு சென்று வந்துள்ளது.
இதனிடையே, பார்த்தீபனுக்கு பெற்றோர் வேறொரு இடத்தில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். ஜூன் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெறுவதாகவும் இருந்துள்ளது. இந்த தகவலை அறிந்த அபிநயா, அதிர்ச்சியுடன் பார்த்தீபனை தொடர்பு கொண்டு நியாயம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் உடையார்பாளையம் பகுதிக்கு நண்பர்களோடு திருமண அழைப்பிதழ் கொடுக்க பார்த்தீபன் வந்துவிட, அதனை அபிநயாவும் கண்டு சண்டையிட்டுள்ளார். இதனால் அபிநயாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, திருச்சி - சிதம்பரம் சாலையில் பயணம் செய்துள்ளார். Hidden Strike 2023: அட்டகாசமாக வெளியானது ஜாக்கி சான் – ஜான் சீனாவின் ஆக்சன்-காமெடி ஹிட்டன் ஸ்ட்ரைக் படத்தின் டிரைலர்..!
அங்குள்ள பொட்டக்கொல்லை கிராமம் அருகே உள்ள தடுப்புசுவற்றில் இவர்களின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விபத்தில் சிக்கிய காதலி படுகாயமடைய, லேசான காயத்துடன் தப்பிய பார்த்தீபன் காதலியை மீட்காமல் அப்படியே விட்டுவிட்டு சென்றார்.
சாலையோர பள்ளத்தில் உயிருக்கு போராடிய அபிநயா, மறுநாள் காலை வரையில் உயிருக்கு போராடி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவ்வழியே அதிகாலை சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது மழை பெய்த காரணத்தால், அவ்வழியே வாகனங்கள் சென்றபோதும் அபிநயாவை காண இயலவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், உண்மையில் காதலியை விபத்தில் பார்த்தீபன் பறிகொடுத்தாரா? அபிநயாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.