RIP Captain Vijayakanth: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.. சோகத்தில் தமிழகம்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அவருடைய கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டிசம்பர் 29, சென்னை (Chennai): தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கேப்டன் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டிருந்தது. பின் பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. ஊர்வலம் வரும் வழி நெடுகிலும் பொதுமக்கள் கேப்டனை இனி எப்போது பார்ப்போம் என மக்கள் கண்ணீரில் கதறினர். கேப்டன் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருந்தனர். CISF Chief: இந்திய வரலாற்றிலேயே முதல்முறை... முக்கிய பதவியில் பெண்மணி..!
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்: இதைத் தொடர்ந்து 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க, தமிழ்நாடு அரசின் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின் அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி, இறுதிச் சடங்குகளை மகன்கள் செய்தனர். இதையடுத்து அவரது உடலை கடைசியாக அவரது குடும்பத்தினர் பார்த்து கண்ணீர் சிந்தினர். விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.