Avaniyapuram Jallikattu: அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... தற்போதைய நிலவரம்.. 45 பேர் காயம்..!
தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி 15, மதுரை (Madurai): பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுர ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதன்படி இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் சுற்றில், 100 காளைகள், 50 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். Thalapathy 68: விஜய் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. இது கண்டிப்பாக தளபதி பொங்கல் தான்..!
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
45 பேர் காயம்: இந்நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி, காளைகள் முட்டியதில் மொத்தம் 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவனியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த 9 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.