Tamil Nadu Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை?.!
இந்திய நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்தனர். மேலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற வாக்குசாவடிகளில் பதிவான வாக்கு பெட்டிகளை சீல் வைக்கும் பணி முகவர்கள் முன்னிலையில் தொடங்கியது.
தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டைப் (Tamil Nadu) பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் 62.08% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி 72.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை 46.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 72.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. Mount Tai in China: 7200 படிக்கட்டுகளைக் கொண்ட தாய் மலை.. மேலே ஏறி கீழே இறங்குவதற்குள் ஒரு வழியாகி விடும் சுற்றுலா பயணிகள்..!
கடந்த 2019 கணக்கின் படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 99 லட்சத்து 41 ஆயிரத்து 832 வாக்காளர்கள் ஆகும். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 4 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 753 வாக்காளர்கள் வாக்களித்தனர். அப்போதிருந்த 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 72.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த முறை விட குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளனர். என்னதான் நூறு சதவீத வாக்கிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது எட்டாத கனியாகவே இன்னமும் உள்ளது.